
Cinema News
எஸ்.ஜே.சூர்யாவுக்கு அஜித் கொடுத்த கார்! ஆசையா கொடுத்தத இப்படி பண்ணீட்டீங்களே!
தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற எண்ணத்தில் வந்த ஒரு சில பேரின் வாழ்க்கை அவர்கள் நினைத்ததை விட மொத்தமாக மாறியிருக்கும். எப்படியோ வந்தேன் ஆனால் இப்போ என் நிலைமையை பாருங்க என்று புலம்பும் பல பிரபலங்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் எஸ்.ஜே.சூர்யாவும் ஆரம்பத்தில் நடிகராக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வந்தார்.
ஆனால் சூழ்நிலை அவரை உதவி இயக்குனராக மாற்றியது. அதன் பிறகு முதன் முதலில் வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அஜித் அந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். படம் யாரும் எதிர்பார்க்காத அளவில் வெற்றியை பதிவு செய்தது.

surya1
அந்தப் படத்தின் வெற்றி யாருய்யா இந்த எஸ்.ஜே.சூர்யா என கேட்க வைத்தது. சரி முதல் படத்தில்தான் இப்படி ஒரு வெற்றி என்றால் தனது இரண்டாவது படத்திலேயே விஜயுடன் இணைந்தார். குஷி படத்தை இயக்கினார். அந்தப் படம் எப்பேற்பட்ட வெற்றியை பெற்றது என அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
தொடர்ந்து விஜய் , அஜித் இவர்களை வைத்து மாபெரும் வெற்றியை கொடுத்த எஸ்.ஜே.சூர்யாவை சினிமா திரும்பி பார்த்தது. தொடர்ந்து பல படங்களை இயக்க வாய்ப்பு வந்தும் அதை மறுத்து வந்தார். காரணம் அவருடைய ஒரே எண்ணம் நடிகராக வேண்டும் என்பதுதான்.
ஆனால் காலம் பொறுத்திருந்தவர்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பை பெற்றுத்தரும். அவர் ஆசைப்படியே இன்று தமிழக மக்கள் கொண்டாடப்படும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. வில்லனாக அனைவரையும் மிரட்டி வருகிறார்.
இந்த நிலையில் தனது முதல் படமான வாலி சமயத்தில் அஜித் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஒரு காரையும் பைக்கையும் பரிசாக கொடுத்தார் என்பது தெரியும். அந்த காரும் பைக்கும் இப்போ இருக்கிறதா? என எஸ்ஜே.சூர்யாவிடம் ஒரு பேட்டியில் கேட்க, காரை அவரின் அப்பாவுக்கு தெரிந்த ஒரு நண்பருக்கு கொடுத்து விட்டாராம். ஏனெனில் ஒரு காரின் வயது 12 வருடம்தான்.

surya2
அதனால் அதன் பெயிண்டை மாற்றி கொடுத்துவிட்டதாகவும் பைக்கை அவருடைய நண்பருக்கு கொடுத்து விட்டதாகவும் கூறினார். மேலும் அஜித்தை பற்றி கேட்டதற்கு ‘அஜித்தை யாராலும் நெருங்க முடியவில்லை, அவர் ஒரு தனிமை விரும்பி’ என்று கூறினார்.