வாலி திரைப்பட மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா. அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். இப்படத்திற்கு தேவா ரசிக்கத்தக்க பாடல்களை கொடுத்திருந்தார். இந்த படம் ஹிட் அடித்ததும் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு எஸ்.ஜே.சூர்யாவுக்கு கிடைத்தது.
அப்படி உருவான திரைப்படம்தான் குஷி. விஜய் – ஜோதிகா நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், அதன்பின் நானே ஹீரோ என களம் இறங்கினார் எஸ்.ஜே.சூர்யா. நியூ, அன்பே ஆருயிரே, இசை ஆகிய படங்களை இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார்.
இதையும் படிங்க: நான் தப்புனா பாரதியாரும் தப்புதான்… பாடல் வரியை மாற்ற முடியாது… கறாராய் சொன்ன வாலி…
அதன்பின் இதுவரை எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. ஆனால், முழுநேர நடிகராக மாறிவிட்டார். மெர்சல், ஸ்பைடர், மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை, மாநாடு, டான் என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ள மார்க் ஆண்டனி படத்திலும் அசத்தலான நடிப்பை கொடுத்திருந்தார்.
எஸ்.ஜே.சூர்யாவுக்கு முதல் படத்தை இயக்கும் வாய்ப்பு என்பது சுலபமாக கிடைத்துவிடவில்லை. வாலி சில படங்களில் வேலை செய்துவிட்டு இயக்குனர் வஸந்திடம் உதவியாளராக சேர்ந்தார். ஆசை படம் உருவானபோது அஜித்துடன் பழக்கம் ஏற்பட்டது. ஆனால், அப்படம் முடிவடையும் நேரத்தில் அப்படத்திலிருந்து எஸ்.ஜே.சூர்யா வெளியேறினார்.
இதையும் படிங்க: அப்பாடி இப்பவாது மனசு வந்துச்சே… அஜித்தின் திடீர் செயல்… கலக்கத்தில் இருந்த மகிழ் திருமேனியே குஷி ஆகிட்டாரு!
அதற்கு காரணம் லிவிங்ஸ்டன். அவர் நடிப்பில் உருவான சுந்தர புருஷன் படத்தில் போய் வேலை செய்தார். அதன்பின் அஜித் நடித்த உல்லாசம் படத்திலும் எஸ்.ஜே.சூர்யா வேலை செய்தார். அப்போது எஸ்.ஜே சூர்யா செயல்படும் விதத்தை பார்த்த அஜித் அவரை அழைத்து ‘ஒரு நல்ல கதை ரெடி பண்ணு. நான் உன் படத்தில் நடிக்கிறேன்’ என சொல்ல அப்படி உருவான திரைப்படம்தான் வாலி.
இந்த படத்தையும் சுலபமாக அவர் இயக்கிவிடவில்லை. இப்படத்தின் தயாரிப்பாளர் சக்கவரவர்த்தி எப்போதெல்லாம் பணம் கொடுக்கிறாரோ அப்போதெல்லாம் படப்பிடிப்பை நடத்தித்தான் படத்தை முடித்துள்ளனர். இப்படியெல்லாம் போராடித்தான் அந்த படம் வெளியாகி எஸ்.ஜே.சூர்யாவை இயக்குனராக மாற்றியது.
இதையும் படிங்க: எல்லாம் ஒரு சூட்சமம்தான்! அடுத்தப்படத்திற்கு பக்காவா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அஜித் – இதுக்குத்தான் அந்த புகழாரமா?
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…