Ajith Vs Rajini: 80களில் ஒரு பல நடிகர்களின் படங்களும் ஒரே நாளில் வெளியாகும். தீபாவளியோ, பொங்கலோ ரஜினி, கமல், விஜயகாந்த், சத்தியராஜ், பிரபு, ராமராஜன், மோகன் என எல்லோரின் படங்களும் வெளியாகும். எல்லா படங்களுமே நன்றாக ஓடி வசூலை அள்ளும் இதில், ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும் படங்கள் 100 நாட்களுக்கும் மேல் ஓடும்.
90களிலும் இது கொஞ்சம் குறைந்தது. ரஜினி, கமல், விஜய், அஜித், விஜயகாந்த் படங்கள் அப்படி வெளியானது. நடிகர் ரஜினி பல வருடங்களாகவே சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தை வைத்திருக்கிறார். இன்னமும் அவரின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. அதேநேரம், விஜயின் சில படங்கள் ரஜினி படங்களை விட அதிக வசூல் செய்த சம்பவங்களும் நடந்தது.
இதையும் படிங்க: நானும் ரவுடிதான் படத்தில் நான் நடிக்க முடியாது.. அடம் பிடித்த நடிகரிடம் கெஞ்சிய விக்னேஷ் சிவன்
ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் விஜய் மாறினார். அதனால்தான் ஜெயிலர் பட விழாவில் கழுகு – காக்கா கதையை ரஜினி சொன்னார் என விஜய் ரசிகர்கள் நம்புகிறார்கள். நான் விஜயை சொல்லவில்லை என ரஜினி விளக்கமளித்தும் அவர்கள் ஏற்கவில்லை.
ரஜினி படங்கள் வெளியாகும் போது டிவிட்டரில் அசிங்கமான ஹேஷ்டேக்குகள் மூலம் அவரை திட்டியும், படத்தை ட்ரோல் செய்தும் சந்தோஷப்பட்டு வருகிறார்கள். ரஜினியின் வேட்டையன் படம் வெளியான போது அதே தேதியில் வெளியாகவிருந்த கங்குவா படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

ஆனால், சமீபத்தில் வெளியான கங்குவா எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் குட் பேட் அக்லி படமும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கூலி படமும் 2026 மே 1ம் தேதி ஒன்றாக வெளியாகலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ரஜினியின் பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசம் படமும் ஒன்றாக வெளியானது. இதில், பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் அதிக வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Pushpa 2: இந்திய சினிமாவில் ‘புதிய’ சாதனை… டிவி உரிமையை ‘மொத்தமாக’ தூக்கிய நிறுவனம்!





