அடிச்சு தூள் கிளப்ப வருது.. வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தின் டிரெய்லர் அப்டேட்

by Rohini |   ( Updated:2025-03-31 05:49:18  )
good
X

good

அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படத்தில் அஜித் இதுவரை இல்லாத அளவு பல வேடங்களில் வருகிறார். அதாவது இதற்கு முன் அவர் நடித்த படங்களில் கெட்டப்களில் இந்தப் படத்தில் வருகிறார்.

தீனா, பில்லா, வேதாளம், ரெட் என கமெர்ஷியலாக அவருக்கு ஹிட் கொடுத்த படங்களின் கெட்டப்களில் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் ரசிகர்களுக்கு இந்தப் படம் பெரிய ட்ரீட்டாக அமைய போகிறது. விடாமுயற்சி படம் ஏமாற்றிய நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கான படமாகத்தான் இருக்கப் போகிறது. அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

படத்தின் டீஸர் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் முதல் , இரண்டாம் பாடல்களும் வெளியாகி படத்திற்கு பெரிய ஹைப்பை கொடுத்திருக்கிறது. அதுவும் சமீபத்தில் வெளியான ஜெயில் பாடல் ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருக்கிறது. இந்த நிலையில் ஒரு படம் சென்சார் போகும் வரை படத்தின் இசையமைப்பாளர் அந்தப் படத்தில் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்.

ஆனா ஜிவியை பொறுத்தவரைக்கும் கடைசி நிமிடத்தில் இந்தப் படத்திற்குள் வந்தார். தேவி ஸ்ரீ பிரசாத்தான் முதலில் இசையமைக்க இருந்தார். ஆனால் அவருக்கு பதில் தான் ஜிவி வந்தார். இருந்தாலும் பாடல், பிஜிஎம் என எல்லாவற்றையும் பக்காவாக போட்டுக் கொடுத்து படத்தையும் ப்ரோமோட் செய்து வருகிறார். நாள்தோறும் குட் பேட் அக்லி படம் பற்றி எதாவது ஒரு அப்டேட்டை தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டுக் கொண்டே இருக்கிறார்.

ajith

இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் பற்றிய அப்டேட்டும் இப்போது வெளியாகியிருக்கிறது. வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி படத்தின் டிரெய்லர் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் கூஸ் பம்பை ஏற்படுத்திய நிலையில் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெறியேத்த வைக்க போகிறது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

Next Story