More
Categories: Cinema News latest news

குட் பேட் அக்லி படத்தில் இணையும் முக்கிய நடிகை… இது 5வது முறையாம்!..

Good Bad Ugly: அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க இருக்கும் முக்கிய நடிகை குறித்த அப்டேட் வெளியாகி இருக்கும் நிலையில், இந்த கூட்டணி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

துணிவு திரைப்படம் ரிலீஸாக ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது. ஆனால் அஜித்தின் அடுத்த படமான விடாமுயற்சி இதுவரை முடியவே இல்லை. ஆனால் அவருடன் வாரிசு படத்தினை ரிலீஸ் செய்த விஜய் தன்னுடைய அடுத்த படமான லியோவை ரிலீஸ் செய்தே விட்டார். கோட் திரைப்படம் முடியும் நிலைக்கே வந்துவிட்டது. இதனால் தன்னுடைய அடுத்த படத்தினை உடனே முடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் அஜித்.

Advertising
Advertising

இதையும் படிங்க: சிவாஜிக்கு எம்.ஜி.ஆர் குரலில் பாடிய டி.எம்.எஸ்!.. இப்படி எல்லாம் கூட நடந்திருக்கா..?!

அதனால், பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார்.

அஜித் வ்ரலாறு படத்துக்கு பின்னர் இப்படத்தில் மூன்று ரோலில் நடிக்க இருக்கிறார். ரௌடி லுக்கில் அஜித் நடிக்க இருக்கும் இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படத்தின் ஓடிடி உரிமை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு 95 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது.

இதையும் படிங்க: விஜயகாந்தை பற்றி கமல் எப்போதும் சொல்லும் ஒரு வார்த்தை! போட்டி நடிகர்களையே பிரமிக்க வைத்த கேப்டன்

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்னர், பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் என நான்கு படங்களில் இருவரும் இணைந்து நடித்து இருக்கின்றனர். தற்போது இப்படம் இவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் ஐந்தாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan

Recent Posts