என் பேர யூஸ் பண்ணாதனு அஜித் சொன்னாரு!.. பிரபல நகைச்சுவை நடிகர் சொன்ன சுவாரஸ்ய தகவல்..

by Rohini |   ( Updated:2023-04-03 08:52:45  )
ajith
X

ajith

தமிழ் சினிமாவில் அஜித் ஒரு மாஸ் ஹீரோவாக ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கடைசியாக வெளியான துணிவு படம் அஜித்தை ஒரு பெரிய ஹைப்பில் கொண்டு சென்றது. அதனை அடுத்து அவரின் ஏகே 62 படத்தை பற்றிய எதிர்பார்ப்பும் அதிகளவில் ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அஜித்தின் தந்தை மரணம் அவரை மிகவும் பாதித்தது. திரைப்பிரபலங்கள் பலரும் அவரின் தந்தை இறப்பிற்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் அந்த நேரத்தில் அஜித் வெளியிட்ட அறிக்கை தான் அனைவருக்கும் அவர் மீது இன்னும் அதிகமான மரியாதை வர காரணமாக இருந்தது.

எங்கள் வீட்டு நிகழ்வு, அதை முறையாக செய்ய ரசிகர்கள் வழிவகுக்க வேண்டும் என ஒரு அன்பான கோரிக்கையை வைத்து ரசிகர்களை தன் அன்பால் முடக்கினார். இந்த மாதிரி பல விஷயங்களில் அஜித் முற்றிலும் வித்தியாசமாகவே இருக்கக் கூடியவர்.

அவரால் நலமடைந்தவர்கள் ஏராளம். ஆனால் அது இதுவரைக்கும் வெளியில் தெரிவதில்லை. காரணம் பப்ளிசிட்டியை முற்றிலுமாக வெறுக்கக் கூடியவர் அஜித். எத்தனையோ நல்ல உதவிகளை மறைமுகமாகவும் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அஜித்தின் ஆச்சரியமான குணம் ஒன்று தன்னை மிகவும் ஈர்த்தது என பிரபல காமெடி நடிகர் காக்கா கோபால் ஒரு பேட்டியில் கூறினார். அஜித்துடன் சிட்டிசன், தொடரும் மற்றும் ரன் போன்ற பல படங்களில் நடித்தவர் தான் காக்கா கோபால்.

ஒரு சமயம் காக்கா கோபாலை பிபிசி சேனலில் இருந்து பேட்டி எடுக்க வந்ததாம். அப்போது அந்த பேட்டியில் அஜித்தை தனக்கு தெரியும் என்று சொல்லியிருக்கிறார் காக்கா கோபால். இதை அஜித்திடம் வந்தும் சொல்லியிருக்கிறார். அப்போது அஜித் காக்கா கோபாலிடம் ‘கோபால் நீங்க மேல வாங்க, என்னை எதுக்கு சொல்றீங்க, நான் எப்படியும் வந்துருவேன், நீங்க வாங்க’ என்று தோளை தட்டி கொடுத்து சொன்னாராம்.

Next Story