‘வரலாறு’ படத்திற்காக அஜித் பட்ட கஷ்டம்!.. வெற்றிக்கு பின்னாடி இருக்கும் ஒரு சோகமான சம்பவம்..
அஜித் , கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவான ஒரு அருமையான படம் தான் ‘வரலாறு’ திரைப்படம். இந்தப் படத்தில் அஜித் மூன்று கெட்டப்களில் நடித்து ரசிகர்களை மிரளவைத்திருப்பார். முதலில் இந்தப் படம் கமலுக்காக எழுதப்பட்டது. ஆனால் அப்போது கமல் தெனாலி படத்தின் கதையில் ஆர்வமாக இருந்ததால் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது.
அதே சமயம் ரஜினியிடமும் வரலாறு கதை போனது. அவராலும் சில காரணங்களால் படத்தில் நடிக்க முடியாமல் போனது. கடைசியாக வந்து சேர்ந்த இடம் அஜித். யாரும் எதிர்பார்க்காத நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தியிருப்பார் அஜித். மேலும் படமும் மாஸ் ஹிட் ஆகி வரலாறு படைத்தது.
ஆனால் படம் வெளியாவதற்கு அஜித் பட்ட கஷ்டத்தை வினியோகஸ்தரர் திருச்சி சிவா ஒரு பேட்டியின் போது கூறினார். அதாவது சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் சில பல பொருளாதார பிரச்சினையில் வரலாறு படத்தின் தயாரிப்பாளர் இருந்தாராம். அப்போது ஒரு நாள் இரவு தயாரிப்பு கவுன்சில், வினியோகஸ்தரர் கவுன்சில் கணக்குகள் எல்லாம் பார்த்து சில பல லட்சங்கள் ஷார்ட்டேஜ் ஆனதாம்.
அப்போது இந்த விவரத்தை நேராக அஜித்திடம் போய் சொல்லியிருக்கின்றனர். அப்போது அஜித்திடம் அந்த அளவுக்கு பணம் இல்லையாம்.ஆனால் ஒரு வார்த்தை மட்டும் அஜித் கூறினாராம். அதாவது ‘வரலாறு படம் என் கெரியரில் மிகவும் திருப்புமுனையாக அமையப்போகிற படம். கண்டிப்பாக படம் வெளியாகி எதிர்பாராத ரிட்டர்ன்ஸ் வர தான் போகிறது. அதிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்’ என்றும்,
இல்லை என்றால் என் அடுத்த கால்ஷீட் யார் வாங்குகிறார்களோ அவர்களிடம் இருந்து எனக்கான அட்வான்ஸ் தொகையை பெற்றுக் கொண்டு அதை வைத்து உங்களுக்கு தேவையான பணத்தை கொடுத்து விடுகிறேன் என்றும் கூறினாராம். அதுவும் இல்லையென்றால் ஒரு நல்ல தயாரிப்பாளரிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள், என் அடுத்த படத்தின் அட்வான்ஸ் தொகையை வைத்து அந்த தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விடுகிறேன் என்றும் கூறினாராம்.
இதையும் படிங்க : கமலின் ஃபிளாப் படத்தை கிண்டலடித்த சத்தியராஜ்!.. பல வருடம் கழித்து இயக்குனர் பகிர்ந்த சீக்ரெட்!…
அஜித்தின் வார்த்தையை வேத வாக்காக கொண்டு வினியோகஸ்தரர்கள் நேராக ஆனந்தா பிக்சர்ஸ் நிறுவனர் சுரேஷிடம் போய் நடந்ததை சொல்லியிருக்கின்றனர். அவரும் அஜித் இப்படி சொல்லியிருக்கிறார் என்றால் கண்டிப்பாக அதை நிறைவேற்றுவார் என்று ரிலீஸுக்கு தேவையான பணத்தை கொடுத்திருக்கிறார்.மேலும் ஆனந்தா பிக்சர்ஸ் நிறுவனம் அதன் அடுத்த படத்தை அஜித்தை வைத்தே தயாரித்திருக்கிறது. அந்தப் படம் தான் ‘பில்லா’.