18 நிமிடத்திற்கு முன்பே வந்து காத்திருந்த அஜித்! அதுவரை என்ன செய்தார் தெரியுமா.. வெளியான புகைப்படம்
Actor Ajith: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது அஜித் விடாமுயற்சி படத்தில் பிஸியாக இருக்கிறார். இன்று தேர்தல் நாள் என்பதால் வாக்குப்பதிவை முடித்து விட்டு விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு வெளி நாடு செல்ல இருக்கிறார் அஜித். இன்னும் 40 சதவீத படப்பிடிப்புகள் மட்டுமே இருக்கும் பட்சத்தில் இந்த வருட இறுதியில் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணைய இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க இருக்கிறது. குட் பேட் அக்லி படம் அடுத்த வருடம் பொங்கல் தினத்தன்று ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதனால் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: புரட்சித்தளபதி தளபதி ஆக வேண்டாமா? ஆசையை தூண்டி விஷாலின் அரசியலுக்கு முட்டுக்கட்டை போட்ட பிரபலம்
இந்த நிலையில் இன்று அஜித் தனது ஜனநாயக கடமையை ஆற்ற அவருடைய தொகுதியான திருவான்மீயூருக்கு ஓட்டுப் போட வந்திருந்தார். அதிகாலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு ஆரம்பம் என்றாலும் அஜித் 18 நிமிடங்கள் முன்பாகவே வாக்குசாவடி மையத்திற்கு வருகை தந்து காத்திருந்தார்.
எப்பொழுதுமே திரையுலகில் இருந்து முதல் ஆளாக ஓட்டுப் போட அஜித் வந்துவிடுவார். அதனால் இந்த முறையும் மீடியாக்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்க சரியாக 7 மணிக்கு வாக்குசாவடி மையத்திற்கு வந்து விட்டார் அஜித். அங்கு இருந்த ஒரு பள்ளியில்தான் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு போடப்பட்ட ஒரு மரப் பெஞ்சில் அஜித் உட்கார வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: இமான் வருவதற்குள் போய்விட்டார் அமரன்!.. எஸ்.கே.வை கலாய்த்த பிரபலம்!.. இது செம நக்கல்யா!..
இதுவரை அஜித்தை கேஷுவல் லுக்கில் யாரும் பார்த்திருக்க மாட்டோம். அந்த பெஞ்சில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து தான் கொண்டு வந்த மொபைல் போனை பார்த்த படி வருவோர் போவோரை பார்த்து சிரித்த படி அஜித் இருந்தார்.