கைவிரித்த கம்பெனிகள்!.. கையை பிசையும் அஜித்!.. டேர் டெவில் டேக்ஆப் ஆகுமா?…
டேர் டெவில் படம் தொடர்பான அப்டேட்…

குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையிலும் அஜித்தின் அடுத்த படத்தின் ஷூட்டிங் தற்போது வரை துவங்கப்படவில்லை. அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குகிறார் என அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டது..
ஒருபக்கம் அஜித் தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். ஒரு பக்கம் அவர் கேட்கும் ரூ.185 கோடி சம்பளத்தை கொடுக்க எந்த தயாரிப்பாளரும் தயாராக இல்லை. பல மாதங்கள் தமிழ்நாடு, மும்பை என பல ஊர்களுக்கும் சென்று தயாரிப்பாளர்களை தேடியும் எதுவும் நடக்கவில்லை..
ஒரு கட்டத்தில் தானே இந்த படத்தை தயாரிப்பது என்கிற முடிவுக்கு அஜித் வந்தார். படத்திற்கு டேர் டேவில் எனத் தலைப்பு வைக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு பல அறிவிப்பும் வெளியானது. பொதுவாக தயாரிப்பாளர்கள் தங்கள் சொந்த பணத்தை போட்டு எந்த திரைப்படத்தையும் தயாரிக்க மாட்டார்கள். பைனான்ஸ் வாங்கியே படத்தை எடுப்பார்கள். டேர் டெவில் படத்தைப் பொறுத்தவரை படத்தின் ஆரம்பகட்ட பணிகளை செய்வது அஜித் பணம் கொடுக்க கொடுக்கவில்லையாம்..

ஒருபக்கம், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கிளாடியேட்டர்ஸ் என்கிற ஆவண திரைப்படத்தில் அஜித் நடித்திருக்கிறார். மோட்டார் ஸ்போர்ட்ஸில் அஜித்துக்கு இருக்கும் ஆர்வம் பற்றி இந்த ஆவணப்படம் விவரிக்கிறது. இந்த படத்தை தியேட்டரில் வெளியிட்டும், சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை விற்றும் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து டேர் டெவில் படத்தில் முதலீடு செய்யலாம் என்கிற முடிவில் அஜித் இருந்தார்.
ஆனால் அந்தப் படத்தை தியேட்டரில் வெளியிட்ட வினியோகஸ்தர்கள் முன் வரவில்லை. அதேபோல் இந்த படத்தை வாங்கவும் எந்த ஓடிடி நிறுவனமும், டிவி சேனலும் முன் வரவில்லை. ஏனெனில் மூணு மணி நேரம் ஒரு ஆவண திரைப்படத்தை ரசிகர்கள் உட்கார்ந்து ரசிக்க மாட்டார்கள் என அவர்கள் நம்புகிறார்கள். எனவே கிளாடியேட்டர்ஸ் படத்தின் வியாபாரம் நடைபெறவில்லை. எனவே, என்ன செய்வது என அஜித் கையை பிசைந்து வருகிறாராம். அஜித்தின் கைக்கு பணம் வரும்வரை டேர் டெவில் படம் துவங்கப்பட மாட்டாது என சொல்லப்படுகிறது.












