கடுங்குளிரிலிருந்து கிட்டத்தட்ட 100 பேரை காப்பாற்றிய அஜித்!.. ஷாக் ஆன ஒட்டுமொத்த படக்குழு!..

by Rohini |
ajith_main_cine
X

ajith

தமிழ் சினிமாவுக்கே இன்றைக்கு ஒரு பெருமைக்குரிய நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். தல என அன்பால் அழைக்கப்படும் அஜித் தற்போது தான் துணிவு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படம் வருகிற பொங்கல் அன்று விஜயின் வாரிசு படத்தோடு நேருக்கு நேராக மோத இருக்கின்றது.

ajith2_cine

ajith

இதனையடுத்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இவரின் உதவி மனப்பான்மை பல பேருக்கு தெரியாமலே இருக்கின்றது.

இதையும் படிங்க : வாழ்க்கை கொடுத்தவர்!.. லட்ச ரூபாய்க்காக நன்றியை மறந்தாரா இளையராஜா?..

பப்ளிசிட்டியை விரும்பாத அஜித் அவர்களால் பயன்பெற்ற சில பேர் சொல்ல அவர் என்னவெல்லாம் செய்தார் என்றே நாம் அறிய முடிகிறது. அந்த வகையில் அஜித், ஜோதிகா நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த முகவரி படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் சுப்பிரமணியன் சிவா நம்மிடையே பகிர்ந்தார்.

ajith1_cine

ajith jyothika

வி.சி.துரை இயக்கத்தில் வெளிவந்த முகவரி படத்தில் நடிகர் ரகுவரன், விவேக், மணிவன்னன் போன்ற முன்னனி நடிகர்கள் நடித்து வெளியான படம் ஒரு ரொமாண்டிக் கலந்த இசைப்படமாக அமைந்தது. படத்திற்கு பிசி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் படம் வெளியானது. அஜிதி நடிப்பில் வெளிவந்த மிகவும் எதார்த்தமான படமாக அமைந்தது.

இதையும் படிங்க : லவ் டுடே பிரதீப் சொன்ன சயின்ஸ் பிக்சன் கதை… ஓகே சொல்வாரா விஜய்?.. பரபர தகவல்…

அந்த படத்தின் ஒரு டூயட் பாடல் காட்சியை வெளியூர் படப்பிடிப்பில் நடத்தலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். மேலும் சூரிய உதயத்தின் போதே எடுக்க வேண்டும் என்பது அவர்களது திட்டமாம். பிப்ரவரி மாதம் தானே என்று போனவர்களுக்கு அங்கு பயங்கர குளிரு வாட்டி வதைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 130 பேர் கொண்ட குழு ஒன்று இந்த பாடல் காட்சியை படமாக்க போயிருக்கிறார்கள்.

ajith3_cine

ajith

இவர்களின் நிலைமையை அறிந்த அஜித் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் ஜெர்க்கின் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத உறுப்பினர்கள் ஆச்சரியத்தில் திகைத்திருக்கிறார்கள். மேலும் எப்பவுமே அஜித் படக்குழு உறுப்பினர்கள் டீ சாப்பிட்டால் அவர்களுடன் சேர்ந்து சிறிதளவே டீ சாப்பிடுவாராம்.

Next Story