அஜித்கிட்ட இருந்த அந்த ஒரு விஷயம்! ‘பில்லா’ல அதான் ஒர்க் அவுட் ஆச்சு.. இப்படி வேற இருக்கா?

Billa Ajith: தமிழ் சினிமாவில் ஒரு ஸ்டைலிஷ் ஆன நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித். ரஜினிக்கு எப்படி ஒரு தனி ஸ்டைல் இருக்கிறதோ அதைப்போல அஜித்துக்கும் ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது. தற்போது அஜித் விடாமுயற்சி படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்திற்குப் பிறகு குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணைய இருக்கிறார்.

விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித்தை வைத்து யார் இயக்கப் போகிறார்கள் என்ற ஒரு விவாதமே நடந்தது. அந்த லிஸ்டில் அஜித்தை வைத்து பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் பெயரும் அடிபட்டது. ஆனால் விஷ்ணுவர்தன் ஹிந்தியில் பிசியாக இருந்ததனால் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளே நுழைந்தார். இதன் காரணமாகவே குட் பேட் அக்லி திரைப்படம் அறிவிப்பு வெளியானது.

இதையும் படிங்க: கோபியை மிரட்டிவிட்ட பாக்கியா… சைட் கேப்பில் லவ்சா… முடியலையப்பா!… எங்கள விட்ருங்க…

இந்த நிலையில் பில்லா திரைப்படம் அஜித் பிறந்தநாளான நாளை அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே கில்லி திரைப்படத்தை ரிலீஸ் செய்து திரையரங்க உரிமையாளர்கள் அதிக லாபம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் அஜித் பிறந்தநாள் அன்று பில்லா படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இந்த நிலையில் பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவரதன் ஒரு பேட்டியில் அவருடைய அனுபவங்களை கூறியிருக்கிறார்,

பில்லா படம் ரீ ரிலீஸ் ஆகும் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஆகிவிட்டன. 2007 ஆம் ஆண்டு ரிலீசான பில்லா திரைப்படத்தை அப்பவே நான் தியேட்டரில் போய் பார்க்கவில்லை. பயந்து ஓடி விட்டேன். இப்பொழுது மறுபடியும் ரீலீஸ் ஆகுவதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இதையும் படிங்க: ஷங்கரின் முதல் படம் ‘ஜெண்டில்மேன்’ இல்ல! இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு சீக்ரெட்

ரசிகர்களுடன் மீண்டும் பார்ப்பதில் ஆர்வமாக இருக்கிறேன் என விஷ்ணுவர்தன் கூறினார். மேலும் வாய்ப்பு இருந்தால் மீண்டும் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க காத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறினார். அது மட்டுமில்லாமல் அஜித்துக்கு என ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது.அஜித் சும்மா திரும்பி பார்த்தாலே வேற மாதிரி இருக்கும். பில்லா படம் ஒர்க் அவுட் ஆனதற்கும் அவருடைய அந்த ஸ்டைல் தான் காரணம். நேச்சுரலாகவே அஜித்துக்கு ஒரு ஸ்வாக் இருக்கிறது. அதுதான் இந்த பில்லா படத்தில் வொர்க் அவுட் ஆச்சு. படத்திற்கு என தனியாக நான் எதையும் அஜித்திடம் எதிர்பார்க்கவில்லை. அவருடைய நேச்சுரல் ஸ்வாக் தான் இந்த படத்தில் எனக்கு உதவியாக இருந்தது என விஷ்ணுவர்தன் கூறினார்.

 

Related Articles

Next Story