உலகம் சுற்ற நினைத்த அஜித்.! கால்ஷீட் கட்டு போட்ட நயன்தாரா.! சுவாரஸ்ய பின்னணி.!

நடிகர் அஜித்குமார் அண்மைகாலமாக ஒரு படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார். ஆனால் நேற்று இணையதளத்தில் அவரது 62வது திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என தகவல் வெளியானது.
அவரது 61வது திரைப்படமே இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அதற்குள் எப்படி 62வது திரைப்படத்தின் இயக்குனர் இவர்தான், தயாரிப்பாளர் இவர்தான் என்று தகவல் கசிந்தது என்று விசாரிக்கையில், அஜித் வேறு ஒரு பிளானை நிகழ்த்த திட்டமிட்டிருந்தாராம்.
அதாவது நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனை அஜித்தை சந்திக்க வைத்துள்ளார். நயன்தாரா மூலமாக விக்னேஷ் சிவன் அஜித்தை சந்தித்து கதை கூறியுள்ளார். அந்த கதையையில் நடிக்கலாம் என்று அஜித் முடிவு செய்து இருந்தாராம்.
ஆனால், தனது 61வது திரைப்படத்தை முடித்துவிட்டு, ஒரு ஐந்து மாதம் இருசக்கர வாகனத்தில் உலகம் சுற், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு பைக்கில் செல்ல திட்டமிட்டு இருந்தாராம். அதன் பிறகுதான் சினிமாவில் மீண்டும் நடிப்பது என்று முடிவு செய்திருந்தாராம்.
தற்போது உக்ரைன் - ரஷ்யா இடையே போர் பதற்றம் நிலவி வருவதால், இந்த சமயம் பைக்கில் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வது ஆபத்து என்பதை அஜித்திற்கு நெருக்கமானவர்கள் அஜித்திற்கு உணர்த்தியுள்ளனர்.
இதையும் படியுங்களேன் - காசு கொடுத்து தனுஷ் முகத்த பாக்க வரமாட்டாங்க.?! கழுவி ஊற்றிய சினிமா பிரபலம்.!
அதன்பிறகுதான் உலகம் சுற்றுவதாக இருந்த அந்த ஐந்து மாதங்களை வேறு படத்துக்கு கால்ஷீட் கொடுத்து அந்த புதிய படத்தை முடித்துவிடலாம் என்று அஜித் நினைத்துள்ளாராம். அதன்படிதான் அவரது 62வது படம் பற்றிய பேச்சுகள் தற்போது வீரியம் பெற்றுள்ளன.
நாளை இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது. அது உண்மையா என்று தெரியவில்லை ஒருவேளை நடந்தாலும் நடக்கலாம் என்கிறது சினிமா வட்டாரங்கள்.