Connect with us

அந்த பழக்கத்திற்கு அஜித் அடிமை… அது இல்லாமல் அவரால் இருக்கமுடியாது…

Cinema History

அந்த பழக்கத்திற்கு அஜித் அடிமை… அது இல்லாமல் அவரால் இருக்கமுடியாது…

கோலிவுட்டின் அல்டிமேட் ஸ்டார் அஜித். பெரிதாக வெளியில் தலை காட்டாதவருக்கு இருக்கும் ஒரு பழக்கம் குறித்து தகவல்கள் கசிந்துள்ளன.

தொடக்கத்தில் பெரிய வரவேற்பை அஜித் பெறவில்லை. தெலுங்கு படம் மூலம் நடிகராக எண்ட்ரி கொடுத்தவர். பல விமர்சனங்களையும் சந்தித்தார். பல படங்கள் நடித்தாலும் சரியான ப்ரேக் கிடைக்காமல் சுற்றி வந்தார். இவருக்கு வணிகரீதியான வெற்றி படமாக அமைந்தது ஆசை தான். இயக்குனர் வசந்த் இப்படத்தை இயக்கி இருந்தார். நடிகை சுவலட்சுமி இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். வித்தியாசமாக அமைந்த இப்படத்தின் கதைக்காகவே பெரிதாக கவரப்பட்டது.

அஜித்

இவ்வாறு துவங்கிய திரை வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்தித்தார். தொடர்ச்சியாக மாஸ் கதாபாத்திரங்களில் நடித்தார். இளவயதினர் பலருக்கு அஜித் மீது தனி மரியாதையே உருவாகியது. இதனால் ரசிகர்கள் கூட்டமும் கூடியது. ஒரு கட்டத்தில் தனது ரசிகர்கள் மன்றத்தை கலைத்தார். மீடியாக்களில் வருவதை அறவே தவிர்த்தார். ஏன் தனது பட ப்ரோமோஷன்களில் கூட கலந்து கொள்ளாமல் தான் இருந்து வருகிறார்.

அஜித்

இந்நிலையில், அஜித்திற்கு 24 மணி நேரமும் டீ இருந்து கொண்டே இருக்க வேண்டுமாம். அரை மணிக்கு ஒருமுறை அதை குடித்துக்கொண்டே இருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. எப்போதும் சுறுசுறுப்பு வேண்டும். சோர்வாக இருந்து விட்டால் படப்பிடிப்புகள் பாதிக்கப்படும் என்பதால் தனது துவக்க காலத்தில் இந்த பழக்கத்தை துவங்கி இருக்கிறார். ஆனால், இப்பொழுது இப்பழக்கம் விடாமல் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இதையும் படிங்க: கடுக்கண்…துப்பாக்கி…டெரர் லூக்கில் அஜித்..வெளியானது ‘துணிவு’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்…

அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வைரலாக பரவிவருகிறது. இப்படத்தினை ஹெச். வினோத் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top