தன்னை திட்டியே எழுதியவருக்கு அஜித் செய்த பெரிய உதவி!.. அந்த மனசுதான் கடவுள்!..

by சிவா |   ( Updated:2023-02-01 08:12:36  )
ajith
X

ajith

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். நடிகர் அஜித் நடிப்பதை தொழிலாக மட்டுமே கொண்டவர். பைக் ஓட்டுவது,பைக்கில் பல ஆயிரம் தூரம் தனியாக பயணம் செய்வது,கார் ரேஸில் கலந்து கொள்வது,பைக் சாகசம் செய்வது போன்ற விஷயங்களில் அதிக ஆர்வம் உடையவர். அதேபோல், கஷ்டப்படும் பலருக்கும் பல உதவிகளை அஜித் செய்து வருகிறார். ஆனால், அது வெளியே தெரியாது. தன்னை வெறுத்தவர்களுக்கும் கூட அவர் சில உதவிகளை செய்துள்ளார் என்பதுதான் இதில் ஹைலைட்.

ajith

ajith

ஒரு பத்திரிக்கையாளர் இருந்தார். அவர் அஜித்தை பற்றி பலமுறை தவறாக எழுதியவர். அவர் ஒருமுறை அஜித்தை சந்திக்க சென்றார். அவர் அஜித்திடம் பேசிக்கொண்டிருந்தபோது ‘நான் அவசரமாக வெளியே செல்கிறேன்’ என்று கூறினார். அதற்கு அஜித் ‘அப்படியா? எந்த பக்கம் போறீங்க?’ என கேட்கிறார். அதற்கு அந்த பத்திரிக்கையாளர் நான் ஒரு பிரபல இதய நோய் மருத்துவரை சந்திக்கபோகிறேன். எனக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும், அது போன வருடமே பண்ணி இருக்க வேண்டும். போதிய பணம் இல்லாத காரணத்தினால் செய்ய முடியவில்லை.

ajith

ajith

அதனால், மருந்துகளை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன். இப்போது அந்த மருத்துவரை சந்திக்கத்தான் செல்கிறேன் என்று கூறினார். உடனே அஜித் அந்த மருத்துரை தொலைப்பேசியில் அழைத்து பேசி சிகிச்சைக்கு எவ்வளவு பணம் செலவாகும் என கேட்கிறார். அப்போது மருத்துவர் ஒன்றரை லட்சம் செலவாகும் என சொன்னார். 10,15 வருடங்களுக்கு முன்பு அந்த தொகை மிகவும் பெரிய தொகை ஆகும். ஆனால், நடிகர் அஜித் ‘அவரின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அதற்கான பணத்தை நான் தருகிறேன்’ என அந்த மருத்துவரிடம் கூறினாராம்.

பொதுவாக திரையுலகில் தன்னை திட்டி விமர்சிப்பவர்களை நடிகர்கள் எப்போதும் தள்ளியே வைப்பார்கள். ஆனால், அஜித் அப்படி இல்லை என்பது இந்த சம்பவம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: சிவாஜிக்கும் கண்ணதாசனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவு,.. இமயங்களை இணைத்த இயக்குனர் அவர் யார் தெரியுமா..?

Next Story