Connect with us
ajith

Cinema News

என் பையனை படிக்க வச்சதே அவருதான்! – இப்ப வரைக்கும் மாறல.. அஜித்தை பற்றி கூறிய பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். கடின உழைப்போடும் விடாமுயற்சியுடனும் வளர்ந்து வந்த அஜித்தின் வளர்ச்சியை அனைவரும் மிகவும் பிரமிப்பாக தான் பார்த்து வருகிறார்கள். விடாமுயற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருபவர் அஜித்.

ஆரம்ப காலங்களில் இவர் பட்ட கஷ்டங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் இன்று ஒரு மாஸ் ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார் என்றால் அதற்குப் பின்னணியில் அவர் ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்தது உண்டு. அதற்கு அவர் அப்பாவும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார். தன் மகன் என்ன ஆசைப்படுகிறானோ அதன் படியே போகட்டும் என அஜித்தின் விருப்பத்திற்கு ஏற்ப துணை நின்றவர் அவரது தந்தை. அதனால் தான் அஜித் இன்று ஒரு உயரமான இடத்தை அடைந்திருக்கிறார்.

ajith1

ajith1

மற்றவருக்கு உதவ வேண்டும் என்ற ஒரு நல்ல குணம் படைத்தவர் அஜித். அவர் செய்த பல உதவிகள் வெளியில் தெரியா விட்டாலும் அவரால் பலனடைந்த ஏகப்பட்ட பிரபலங்கள் ரசிகர்கள் உட்பட அவ்வப்போது பேட்டிகளில் கூறி வருவதை நாம் கேட்டிருக்கிறோம். அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவர் அஜித்தால் தனக்கு ஏற்பட்ட உதவியை குறித்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

அவர் வேறு யாரும் இல்லை பிரபல நடிகர் மாரிமுத்து. ஏகப்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லன் நடிகராகவும் நடித்தவர் மாரிமுத்து. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் மூத்த அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருடைய மகனின் படிப்பை அஜித் தான் கவனித்து வந்தாராம். அவரது மகன் எல்கேஜி படிக்கும்போது பள்ளிக்கு பீஸ் கட்ட வேண்டும் என்று அஜித்திடம் போய் கூறினாராம் மாரிமுத்து.

ajith2

ajith2

அப்போது அஜித் “அதற்கு என்ன ஒன்றும் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று தன்னுடைய மேலாளரை அழைத்து எல்கேஜி பீஸ் முழுவதையும் கட்டிவிட்டு அதோடு வருடம் தோறும் அவன் படிப்புக்கான செலவை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னாராம். மேலும் அவன் எப்போதும் வேண்டாம் என்று சொல்கிறானோ அதுவரைக்கும் அந்த செலவுகளை எல்லாம் நானே கவனித்துக் கொள்கிறேன் என்று அஜித் கூறினாராம். அதனால் மாரிமுத்துவின் மகன் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை அவரது பீஸ் அனைத்தையும் அஜித் தான் கட்டினாராம். இதை ஒரு பேட்டியில் கூறிய மாரிமுத்து அஜித் ஒரு நல்ல மனுஷன் என்றும் அந்த குணம் இன்று வரை அவரிடம் இருந்து போகவில்லை என்றும் அப்படியே தான் இருக்கிறார் என்றும் கூறினார்.

இதையும் படிங்க : எல்லாம் அந்த படத்தால வந்தது – சிவகார்த்திகேயனை சுற்றி வளைத்த ரெய்டு அதிகாரிகள்!

google news
Continue Reading

More in Cinema News

To Top