Ajith: அஜித்தை யாராவது திட்டி பாருங்க.. இதுதான் நடக்கும்! அதன் பிறகு யாரும் திட்ட மாட்டிங்க
Ajith: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். ஆரம்பகாலங்களில் சினிமாவில் எப்படியாவது வாய்ப்பை பெற வேண்டும் என பல வகைகளில் போராடியவர் அஜித். எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் இன்று ஒரு உச்ச நடிகராக திகழ்கிறார் என்றால் அதற்கு அவருடைய கடின உழைப்பும் விடாமுயற்சியும்தான் காரணம். என்னுடைய தோல்விக்கு நான் தான் காரணம். என்னுடைய வெற்றிக்கு நான் பட்ட வலிகள்தான் காரணம் என்பதுதான் அஜித்தின் கோட்பாடு.
ஹிட் கொடுப்பாரா ஆதிக்?: அந்த அளவுக்கு சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலையை அடைந்திருக்கிறார். தற்போது அஜித் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. ஏற்கனவே மார்க் ஆண்டனி என்ற தரமான ஆக்ஷன் கமெர்சியல் ஹிட் படத்தை கொடுத்ததனால் ஆதிக் ரவிச்சந்திரன் மீது ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
இதற்கிடையில் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் தீவிர ரசிகரும் கூட. அதனால் கண்டிப்பாக படத்தில் ஒரு ஃபேன் பாய் சம்பவம் இருக்கும் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். படம் அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸ் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் அஜித்தின் நடிப்பில் விடாமுயற்சி படமும் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அஜித்தின் கெரியரில் விடாமுயற்சி படம்தான் பல தடைகளை சந்தித்திருக்கிறது.
பல விமர்சனங்கள்: இந்த நிலையில் அஜித்தை பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. ஆனால் அவர் யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்து வருகிறார். இது தெரிந்த சில பேர் அஜித்தை பாராட்டியும் வந்திருக்கின்றனர். ஒரு சமயம் அஜித் திருமணமாகி மூன்று வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தார். உடனே இதை பத்திரிக்கையில் அஜித்துக்கு ஆண்மை இல்லை என எழுதி விட்டனர்.
தக்க பதிலடி: ஆனால் நடந்ததோ வேறு. அப்படி பத்திரிக்கையில் எழுதிய பத்திரிக்கையாளருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். உடனே 2.50 லட்சம் கட்டினால்தான் ஆப்ரேஷன் பண்ண முடியும் என மருத்துவமனையில் கூற இதை அறிந்த அஜித் உடனடியாக அந்த பணத்தை கொடுத்து உதவியிருக்கிறார், இதை அஜித்தின் பி.ஆர்.ஓ ‘ஏன் சார் அவருக்கு உதவி செஞ்சீங்க? எப்படியெல்லாம் எழுதினா?’ என கேட்டிருக்கிறார்.
அதற்கு அஜித் இந்த சமயத்தில் நாம் ஈகோ பார்க்க கூடாது. வலுவிழந்து கிடப்பவரிடம் மோதியும் பார்க்க கூடாது என கூறினாராம். இதற்கு சாட்சி பிரபல பத்திரிக்கையாளர் பாண்டியன். அவர்தான் இந்த செய்தியை கூறினார். மேலும் அவர் கூறும் போது திரையுலகில் அஜித்தை மாதிரி வேறு யாருமே இல்லை என்றும் கூறியிருந்தார்.