நான்தான் தப்பா நினைச்சுட்டேன்! அஜித் செய்த உதவியை பற்றி பெருமையாக கூறிய பொன்னம்பலம்

ajith
தமிழ் திரையுலகில் ஒரு மாபெரும் நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். எந்த ஒரு துணையும் சப்போர்ட்டும் இல்லாமல் சினிமாவில் ஜெயிப்பது என்பது கடினம். ஆனால் அந்த வகையில் அஜித் இந்த அளவுக்கு வந்திருக்கிறார் என்றால் அவர் எப்பேற்பட்ட கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறார் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

ajith1
சைலண்ட் சப்போர்ட்டா இருந்து அஜித்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் அஜித்தின் அப்பாவும் ஆவார். அவர் இறந்ததில் இருந்து ஒரு கை போன மாதிரிதான் அஜித்திற்கும் இருக்கும். மேலும் ரேஸில் ஆர்வம் கொண்ட அஜித் ஏகப்பட்ட விபத்துக்களால் தன்னுடைய உடம்பில் நூற்றுக்கணக்கான தையல்களுடன் இன்னும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார்.
இதை பற்றி நடிகர் பொன்னம்பலம் ஒரு பேட்டியில் விவரமாக கூறியிருக்கிறார். அஜித்தும் பொன்னம்பலமும் ஒரு சில படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்களாம். அஜித்துடன் நல்ல நெருக்கம் காட்டியவராகவும் அஜித் இருந்திருக்கிறார். அஜித்தை பொன்னம்பலம் தம்பி என்றேதான் அழைப்பாராம்.
முகவரி, அமர்க்களம் போன்ற படங்களில் பணியாற்றும் போதுதான் அஜித்திற்கு ஒரு வலி ஏற்பட சட்டையை கழட்டி காண்பித்தாராம் அஜித். அவர் முதுகை பார்த்ததும் பொன்னம்பலம் ஷாக் ஆகிவிட்டாராம். ஸ்டண்ட் ஆர்ட்டிஸ்டுகளாக இருக்கும் எங்களுக்கே இவ்ளோ தையல் போடப்படவில்லை. ஆனால் அஜித்திற்கு இப்படியா என ஷாக் ஆகிவிட்டாராம்.
கழுத்தில் இருந்து ஆசனவாயில் வரைக்கும் ஆயிரக்கணக்கான தையல் போடப்பட்டிருந்ததாம். பைக் ஆக்ஸிடண்டில் வந்த விளைதானாம் அது. மேலும் யாருக்கும் தெரியாமல் உதவிகளை செய்யக் கூடியவர் என்றும் பொன்னம்பலம் கூறினார். ஒரு சமயம் பொன்னம்பலத்தின் நண்பர் ஒருவரின் மகனுக்கு ஒரு ஆப்ரேஷன் செய்ய வேண்டியிருந்ததாம்.

ajith2
அதனால் பிரபு, குஷ்பு என ஒரு சில பேர் பண உதவிகள் செய்ய மீதம் 50000 ரூபாய் தேவைப்பட்டதாம். உடனே பொன்னம்பலம் அஜித்தை நம்பி வந்தாராம். விவரத்தை சொன்னதும் அஜித் அதை கேட்டுக் கொண்டாராம். படப்பிடிப்பு இடைவேளையில் மீண்டும் அஜித்திற்கு நியாபகப்படுத்தலாம் என்று பொன்னம்பலம் மீண்டும் கூறியிருக்கிறார்.
அதற்கு அஜித் ‘அண்ணா அந்தப் பணத்தை காலையிலேயே ஷாலினியை வைத்து கட்டச் சொல்லிட்டேன்’ என்று அஜித் சொன்னதும் பொன்னம்பலத்துக்கு அதிர்ச்சியாகிவிட்டதாம். இதைப் பற்றி கூறிய பொன்னம்பலம் ‘இந்த ஒரு நிகழ்வுதான் , அஜித்தை பற்றிய ஒரு நல்ல அபிப்ராயம் எனக்கு அன்றே வந்துவிட்டது, யார் என்ன சொன்னாலும் சரி , அஜித்தின் மனசு யாருக்கும் வராது’ என்று கூறினார்.
மேலும் எனக்கு உடல் நிலை சரியில்லாத போதும் ரஜினி, கமல் எல்லாரும் நலம் விசாரிக்க அஜித் மட்டும் ஒன்றுமே கேட்கவில்லையே என்ற கவலை இருந்தது என்றும் கூறிய பொன்னம்பலம் அதன் பிறகு தான் தெரிந்தது , அந்த நேரத்தில் அஜித்தின் அப்பாவுக்கு ரொம்பவும் முடியவில்லையாதலால் அதில் அஜித் கவனம் செலுத்தினார், அதனால் தான் என்னை பற்றி யோசித்திருக்க மாட்டார் என்றும் நினைத்தேன்.

ajith3
இருந்தாலும் அஜித் மனதில் நினைத்துக் கொண்டுதான் இருப்பார், எனக்கு எதாவது பட வாய்ப்பு வரும் போது அண்ணனை அழைக்கலாம், அதன் பிறகு எதாவது உதவிகளை செய்யலாம் என நினைத்துக் கொண்டுதான் இருப்பார் என்று அஜித்தை பற்றி பொன்னம்பலம் கூறினார்.