9 வருடத்தில் 4 ஹிட்தான்.! அதள பாதாளத்துக்கு சென்ற மார்க்கெட்.! பாவம்யா அஜித் ரசிகர்கள்.!

தமிழ் சினிமா நடிகர்களில் பலர் தங்கள் ரசிகர்களை மலை போல நம்பியுள்ளனர். அவர்களை எப்போதும் சந்தோசப்படுத்தும் வகையில் திரைப்படங்களில் நடிப்பர். அதுவும் ஒரு படம் பிளாப் கொடுத்தால் போதும் ரசிகர்கள் சோர்ந்துவிடுவார்கள் அதனால், உடனடியாக அடுத்த படம் ஹிட் கொடுக்க வேண்டும் என தீயாய் வேலை செய்வார்கள். அப்போது தான் அந்த நடிகரை ரசிகர்களும் கொண்டாடுவார்கள்.

தனது ரசிகர்களை மட்டுமே நம்பி திரையுலகில் தற்போது வரை முன்னணி நட்சத்திரமாக வலம் வருவபர் என்றால் அது நடிகர் அஜித்குமார் தான். உண்மையில் எத்தனை படம் தோல்விப் படங்கள் கொடுத்தாலும் அடுத்தடுத்த திரைப்படங்கள் தோல்வியை தழுவினாலும் அடுத்து வெளியாகும் படத்திற்கு முதல் நாள் வந்து நிற்பார்கள். அதனால்தான் முதல் நாள் வசூல் சக்கரவர்த்தி என்று தியேட்டர்காரர்கள் செல்லமாக அழைப்பதுண்டு. அண்மையில் வெளியான வலிமை திரைப்படதின் முதல் நாள் வசூல் கூட அதற்கு சான்று.

2000க்கு முன்புவரை அஜித் வருடத்திற்கு ஒரு படமாவது சூப்பர் ஹிட் படமாக கொடுத்து விடுவார். ஆனால், அதன்பிறகு கதையே வேறு. 2000க்கு பிறகு முழுக்க முழுக்க கார் பந்தயத்தில் கவனம் செலுத்தியதால் திரைத்துறை பக்கம் அவர் கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் - நெல்சன் செய்த காரியத்தால் கடுப்பான ரஜினிகாந்த்.! இனி என்ன வேணும்னாலும் நடக்கலாம்.!

அது அவரது படங்களிலும் எதிரொலிக்கும். 2002ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை 9 வருடங்களில் அவர் கொடுத்த ஹிட் என்பது வெறும் 4 திரைப்படங்கள் தான். வில்லன், அட்டகாசம், வரலாறு, பில்லா இந்த திரைப்படங்கள் தான் அவரது சூப்பர் ஹிட் திரைப்படங்கள். எதேச்சையாக இந்த நான்கு திரைப்படங்களும் இரட்டை வேடம், வரலாறு மட்டும் 3 வேடம்.

மற்றபடி வெளியான ஜி, ஆஞ்சநேயா, ஜனா, பரமசிவன், திருப்பதி, ஆழ்வார், கிரீடம், ஏகன், அசல் என பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வி படங்களே. இருந்தாலும் அஜித் ரசிகர்கள் அவரை கைவிடவில்லை.

'தன்னை போல தமிழ் சினிமாவில் இன்னொரு நடிகர் தோல்வி படங்களை கொடுத்து இருந்தால், அந்த நடிகரை ரசிகர்களும் மறந்தே போய்யிருப்பார்கள். ஆனால் நான் இன்னும் முன்னணி நடிகராக இருப்பதற்கு காரணம் எனது ரசிகர்கள்தான்.' என்று அஜித்தே ஒருமுறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் ரசிகர்கள் மட்டுமல்ல, அஜித்தின் தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் தான் தற்போது வரை அவரை தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க வைத்துள்ளது என்பதே உண்மை.

 

Related Articles

Next Story