அஜித்திற்கு சுத்தமா மார்க்கெட் இல்லையா.?! இவர் தெரிஞ்சிதான் பேசுறாரா?

by Manikandan |   ( Updated:2022-05-01 08:00:57  )
அஜித்திற்கு சுத்தமா மார்க்கெட் இல்லையா.?! இவர் தெரிஞ்சிதான் பேசுறாரா?
X

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தயாரிப்பாளர் சக்கரவர்த்திக்கும் உள்ள நெருக்கம் நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏனென்றால் கிட்டத்தட்ட 2000த்தின் தொடக்கத்தில் இருந்து அஜித் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் தான் உறவானது.

அதன் பிறகு ஏனோ இருவருக்குமானமனக்கசப்பு காரணமாக இவர்கள் தொடர்ந்து படம் எடுப்பதை நிறுத்தி விட்டனர். அதன்பிறகு நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி படம் தயாரிப்பதை பெரும்பாலும் குறைத்துக் கொண்டார். அவர் தயாரிப்பில் கடைசியாக சிம்பு நடித்த வாலு திரைப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது.

அஜீத் ஹீரோவாக வைத்து தயாரித்த சில படங்கள் சரியாக போகாத காரணத்தால் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி, அதன் காரணமாக இவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு, இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. அதன்பிறகு இருவரும் சேர்ந்து படம் எடுக்கவில்லை.

அண்மையில் இவர் ஒரு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், ' அஜித் பற்றி கேட்டிருந்தனர் . அப்போது, ' நான் பெரும்பாலும் இளம் இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பு தருவேன். அப்படித்தான் கதையை நம்பி வாய்ப்பு தருவேன். அப்படித்தான் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு இயக்கும் வாய்ப்பு கொடுத்தேன்.

எஸ்.ஜே.சூர்யா, கூறிய வாலி படத்தின் கதை மிகவும் பிடித்து போனது. கண்டிப்பாக இந்த படம் வெற்றியடையும் என்று அஜீத்தை ஹீரோவாக வைத்து இந்த படத்தை தயாரித்தேன் அந்த சமயம் அஜித்திற்கு பெரிய மார்கெட் இல்லை. அந்த படம் வெற்றி அடைந்தால்தான் மார்க்கெட் என்ற நிலைமை இருந்தது. ' என்று குறிப்பிட்டார்.

இதையும் பாடியங்களேன் - தேடுதல் வேட்டையில் படக்குழு.! பறந்து சென்ற சியான் விக்ரம்.! இன்னும் வேணும் எனக்கு..,

வாலி திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே, காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (சிறப்பு தோற்றம்), தொடரும் ஆகிய திரைப்படங்களில் வெற்றி கண்டுள்ளார் அஜித். இது தெரியாமல்தான் அஜித்துக்கு மார்க்கெட் இல்லை என்று சக்கரவர்த்தி கூறினாரா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

எது எப்படியோ அஜித்துக்கும் சக்கரவர்த்திக்கும் மனக்கசப்பு இருப்பது உண்மைதான். அதற்காக அவருக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லை என்றெல்லாம் கூறி விட முடியாது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்கிறது சினிமா வட்டாரம்.

Next Story