எவ்ளோ தேடியும் கிடைக்கலப்பா!.. ஹீரோயின் சிக்காததால் விக்னேஷ் சிவனின் சூப்பர் ப்ளான்!.. ஏகே-62 புதிய அப்டேட்..
எப்படியோ ஒரு வழியா துணிவு படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரிலீஸ் ஆகிற வரைக்கும் படத்திற்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. இப்பொழுது படம் ரிலீஸ் ஆகி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் வசூல் பற்றிய தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இப்படி அஜித் என்றால் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. துணிவு படத்தை அடுத்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவனுடன் இணைய இருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் ஆரம்பமாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் நடத்த திட்டமிட்டுள்ளனராம்.
முதலில் இந்த படத்தில் திரிஷா நடிப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் திரிஷா கமிட் ஆகவில்லை என்று உறுதியானது.இப்போது படத்திற்கான ஹீரோயினை தேடும் படலத்தில் படக்குழு இருந்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த ஹீரோயினும் செட் ஆகவில்லையாம்.
இதையும் படிங்க : எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுத திணறிய வாலி.. அம்சமா வரி சொன்ன கருணாநிதி.. இது செம மேட்டரு!..
இதனால் முதலில் அஜித்தை வைத்து முதல் செடியூலை எடுத்து விடலாம் என்று விக்னேஷ் சிவன் திட்டமிட்டிருக்கிறாராம். இரண்டாம் செடியூல் சமயம் ஹீரோயினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டாராம் விக்னேஷ் சிவன். சமீபகாலமாக அஜித்திற்கு ஜோடி என்றால் ஒன்று பாலிவுட்டை அணுகுவார்கள் இல்லையென்றால் மற்ற மொழி நடிகையை அணுகிறார்கள்.
வலிமை படத்தில் கூட குரோஷி நடித்தார். துணிவு படத்தில் மஞ்சு வாரியார் நடித்தார். அதே போல் விக்னேஷ் சிவன் எடுக்கப்போகும் படத்தில் எந்த நடிகையை ஜோடியாக போடப்போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.