‘விரைவில் நேர்ல சந்திக்கிறேன்’.. அஜித் சொன்ன இந்த வார்த்தைக்கு பின்னாடி இப்படி அர்த்தம் இருக்கா?

ajith
Ajith: எதிர்பாராததை எதிர்பாருங்கள். நேற்று அஜித் ரசிகர்களுக்கு அப்படி ஒரு பரவச நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் எதிர்பாராத ஒன்று நடந்திருக்கிறது. பத்ம பூஷன் விருதை அஜித் பெற்றது ,அது தொடர்பான காணொளிகளை அனைவரும் பார்த்து பல பேர் ஒரு முழு விருந்தை சாப்பிட்ட சந்தோஷத்தில் இருக்கிறார்கள். அதே சூட்டோடு அஜித் சென்னைக்கு வந்து இறங்கினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டார்கள். அங்கு அவர் பேசிய சில விஷயங்கள் அஜித் ரசிகர்களுக்கே ஒரு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். என்ன சொல்லி இருக்கிறார் என்றால் விரைவில் சந்திப்போம் என்று சொல்லி இருக்கிறார். இது ஏதோ திட்டமிடாமல் பயன்படுத்தப்பட்ட வார்த்தை என நான் சொல்லவில்லை.
அதற்கு பின்னால் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நான் பல மாதங்களுக்கு முன்பாக வாங்க அஜித்தை புறக்கணிப்போம் என ஒரு வீடியோவை பதிவிட்டு இருந்தேன். பல பேர் பயங்கரமாக என்னை கார்னர் செய்தார்கள் .திட்டினார்கள் .கண்ணீர் அஞ்சலி போஸ்டர் கூட ஒட்டினார்கள். ஆனால் அதில் மையமாக சொன்ன ஒரே கருத்து என்னவெனில் இந்த சமூகத்தில் இருந்து நீங்கள் விலகி இருக்காதீர்கள் .நீங்கள் இந்த சமூகத்தோடு சேர்ந்து வாழுங்கள் .உங்களுக்கு என ஒரு தனி வாழ்க்கையை வாழாதீர்கள் என்பதுதான் நான் அந்த வீடியோவில் சொல்லி இருந்தது. இன்று அஜித்தின் ஒவ்வொரு ஸ்டெப்பையும் பார்க்கும் பொழுது நான் அன்று எதை வலியுறுத்தினேனோ அதைத்தான் அஜித் இன்று செய்கிறாரோ என்ற எண்ணம் எனக்குள் வந்தது.
அது என்னால் ஏற்பட்டது என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். அந்த அளவுக்கு நான் பைத்தியக்காரன் கிடையாது. ஆனால் அஜித் மனதில் ஏற்பட்ட இந்த மன மாற்றம் அதை நாம் முழு மனதோடு வரவேற்க வேண்டும். ஏனெனில் எதை அஜித் செய்யணும்னு விரும்புனோமோ அதை மெல்ல மெல்ல அஜித் செய்து கொண்டிருக்கிறார். உங்களுக்காக உயிரையே கொடுக்கிற ரசிகர்கள் இருக்கிறார்கள் .உங்களை உயர்த்தி காட்டிய துறை இருக்கிறது. இது இரண்டையும் விட்டுவிட்டு நீங்கள் வேறு ஒரு வாழ்க்கையை வாழுகிறீர்களே. ஏன் அதற்கு எல்லோரிடமும் எல்லா நேரங்களிலும் ஒரு இணக்கமாக இருங்கள் என்பதை தான் நாம் தொடர்ந்து சொன்னது. அண்மைக்காலமாக இப்போது அந்த இணக்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் .
இதற்கு முன்பு இதே விமான நிலையத்தின் வழியாக பல ஊர்களுக்கு சென்று இருக்கிறார். அப்போ இந்த மாதிரி செய்தியாளர்கள் திரண்டதே கிடையாது .ஆனால் நேற்று சுரேஷ் சந்திராவிடம் எந்த நேரத்தில் விமான நிலையத்தை அடைவேன் என்பதை முதற்கொண்டு சொல்லி அங்கு செய்தியாளர்களை நிற்க வைத்து ஒரு வணக்கம் சொல்லிவிட்டு போகலாம் என்று தான் நினைத்திருப்பார் .இப்படி அவர் வர சொன்னதை பெரிய விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன். இன்று ஒரு சில வார்த்தைகளோடு வந்தவர்களை முடித்துவிட்டு போயிருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் அவர் நிறைய பேசுவார் என்று தான் நான் நம்புகிறேன். அரசியலுக்கும் தனக்கும் எப்போதுமே சம்பந்தம் இல்லை என ஒதுங்கி போகிறவர் தான் அஜித்.
அப்படி இருந்தும் கலைஞர் மேடையில் ஒரு சில விஷயங்களை பேசி அது ஒரு மிகப்பெரிய மன உளைச்சலை அவருக்கு ஏற்படுத்தி அந்த அரசியல் மீது மேலும் அவருக்கு வெறுப்பு வந்தது. அதன் காரணமாகத்தான் நான் இந்த திசைக்கு வரமாட்டேன் என ஒதுங்கினார். சினிமா மட்டுமே போதும் என இருந்தார். அதைத் தாண்டி துப்பாக்கி சுடுதல் கார் ரேஸ் பைக் ரேஸ் இந்த மாதிரி பல செயல்களை செய்தார். இப்போ அவர் தொடர்பானவர்கள் என்ன சொல்கிறார் என்றால் இன்னும் இங்கு என்னெல்லாம் முக்கியமான விஷயங்கள் இருக்கிறதோ அதை அஜித் எதிர்காலத்தில் செய்வார் என சொல்கிறார்கள். அதற்கான எண்ணம் அவருக்குள் உருவாகி இருக்கிறது என்றெல்லாம் கூறி வருகிறார்கள் .
அது எதை நோக்கி இழுத்துக்கொண்டு போகும் என எனக்கு தெரியவில்லை. சரியான எதிரி இருந்தால்தான் ஜெயிக்க முடியும் என்று சொல்பவர் அஜித். ஆனால் அது இப்போது வெற்றிடமாக இருக்கும் பட்சத்தில் அரசியலில் எம்ஜிஆருக்கு அடுத்த நிலைக்கு விஜய் வந்துவிடுவாரோ, அவருக்கு கூடும் கூட்டம் என எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் அஜித். அதே சமயம் பத்மபூஷன் விருதை ஒரு வாய்ப்பாக கொண்டு அஜித்தை சந்திக்க பல அரசியல் தலைவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். புற அழுத்தங்களால் கூட அஜித் அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறது. நேரில் சந்திப்போம் என்பதற்கு பல சம்பவங்கள் உண்டு. அதை எல்லாம் அரசியலுக்கு வந்து அந்த சம்பவத்தை செய்வாரா என்பதை பார்க்க வேண்டும் என வலைப்பேச்சு அந்தணன் இவ்வாறு கூறினார்.