'தல'ன்னா அது அஜீத் மட்டும்தான்... தைரியமாக சொன்ன அந்த பிரபலம் யார் தெரியுமா?..

அஜீத்குமாரின் அடுத்த படம் பற்றிய தகவல் வந்த வண்ணம் உள்ளது. விடாமுயற்சிக்கு முன்பே வெளியாகும் அஜீத் படம் குட் பேட் அக்லி. இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்கிறார்னு பார்ப்போமா...

அஜீத் சாய்பாபாவின் தீவிர பக்தர். அதனால் தான் அவரோட புதுப்படத்தின் அப்டேட் வியாழக்கிழமை வெளியானதாம். ஏகே63 டிரெண்டிங்கில் இருந்தது. இந்தப் படத்தின் டைட்டில் பார்க்கும்போது 3 கெட்டப்பாகக் கூட இருக்கலாம். இந்தப் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை முழுமையாக நம்பி நீங்க பண்ணுங்க. பார்த்துக்கலாம்னு அஜீத் சொன்னாராம்.

இதையும் படிங்க... கமலைப் பார்த்து இப்பவும் பயப்படும் சீரியல் நடிகை… பின்னணியில் இருக்கும் காரணம் இதுதான்!…

ஜனா, ஆஞ்சநேயா, ஆழ்வார் படங்களின் தோல்வியின் காரணமாக நாமும் இனி இறங்கி வேலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாராம் அஜீத். மார்க் அண்டனியின் மெகா ஹிட்டுக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் இது தான்.

விடாமுயற்சி டைட்டில் அறிவிப்பு வந்து 300 நாள் ஆகியும் ஒரு அப்டேட்டும் இல்லை. அஜீத்துக்கும், மகிழ்திருமேனிக்கும் ஒரு கிளாஷ் ஓடிக்கிட்டு இருக்கு. தேவிஸ்ரீபிரசாத் அக்மார்க் அடிமசாலாவாக இருக்கும்.

அவரு பிஜிஎம்லாம் வேற லெவல்ல இருக்கும். அந்த வகையில் தேவிஸ்ரீபிரசாத்தோட இசையில் புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடல் பட்டி தொட்டி எங்கும் தெறிக்க ஆரம்பித்தது. இளையராஜாவின் தீவிர பக்தர் (ரசிகர்) தான் இவர். அதனால ஏகே63க்கு தேவிஸ்ரீபிரசாத் இசைங்கறதால இன்னும் எதிர்பார்ப்பு வந்துள்ளது.

Ajith

Ajith

இந்தப்படத்தோட முக்கால்வாசி படப்பிடிப்பு ஜப்பானில் நடத்தப் போறாங்களாம். அஜீத்துக்கு காதுக்குப்பின்னாடி ஒரு கொழுப்புக்கட்டி இருந்ததாம். அதை எடுத்துவிட்டார்களாம். வேறு ஒரு பிரச்சனையும் இல்லையாம். 2025 பொங்கலுக்கு இந்த குட் பேட் அங்லி வருதாம். இது ரசிகர்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாகவே உள்ளது.

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியைத் தல தலன்னு கொண்டாடுன்னாங்க. ஸ்ரீசாந்த்ன்னு ஒரு கிரிக்கெட் வீரர் 'தலன்னா ஒரே நபர் அஜீத்தான்'னு போல்டா சொன்னாராம். விடாமுயற்சி படமே இன்னும் இழு இழுன்னு இழுக்கும்போது திடீர்னு அஜீத் அடுத்த பட அப்டேட்டைக் கொடுத்து இருக்கிறார்.

இதையும் படிங்க... இந்நேரம் கேப்டன் மட்டும் உயிரோட இருந்தா சவுக்கடி நிச்சயம்! கம்முனு இருந்த பிரேமலதா

இது லைகா மேல் அஜீத்தக்குக் கோபமா என ஒரு கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுகிறது. விடாமுயற்சியைத் தயாரிக்கும் நிறுவனம் லைகா என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story