Vijay Ajith: விஜய்க்காக அஜித் பண்ண விஷயம்.. ‘குட் பேட் அக்லி’யில் இறங்கி ஆடிய தல

vijay (1)
Vijay Ajith: அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் இன்று வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது. அதுவும் ஃபுல் எண்டர்டெயின் படமாக இருப்பதுதான் இந்தப் படத்திற்கான ப்ளஸ். ஆதிக் அஜித்தை எந்தளவு ரசித்திருக்கிறார் என்பது படத்தை பார்த்த அனைவருக்கும் புரியும். ஒரு ஃபேனாக அணு அணுவாக அஜித்தை ரசித்து செதுக்கியிருக்கிறார் ஆதிக்.
அஜித்தை விட ஆதிக்கைதான் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாகத்தான் குட் பேட் அக்லி படம் அமைந்திருக்கிறது. திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்னும் வரும் நாள்கள் விடுமுறை நாள் என்பதால் கலெக்ஷனையும் பெரிய அளவில் எதிர்பார்க்கலாம் என்றும் தெரிகிறது. படத்தின் ஒன் லைன் கேட்டால் சாதாரணமான கதைதான்.
மகனுக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும் ஒரு போராட்டம்தான் இந்தப் படத்தின் கதை. ஆனால் ப்ரேமுக்கு ப்ரேம் ஆதிக் வைத்த ட்விஸ்ட்தான் படத்திற்கான ப்ளஸ். இடையில் பல ரெஃபரன்ஸ்களை கொண்டு வந்து படத்தை எங்கேயோ கொண்டு போய்விட்டார் ஆதிக். இடையில் விஜய் பட வசனமும் வருகிறது. இதற்கு எப்படி அஜித் ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை என்று தயாரிப்பாளர் தனஞ்ச்செயன் கூறியிருக்கிறார்.
ஒரு நான்கு இடத்தில் விஜயின் வசனம் வருவதாக தனஞ்செயன் கூறியிருக்கிறார். ஒரு சீனில் கூட ‘ நண்பா ஐ ஆம் வெயிட்டிங்’ என்று அஜித் பேசியிருப்பார். இப்படி விஜய் பட வசனத்தை அஜித் பேசியிருக்கிறார் என்றால் மறைமுகமாக விஜய்க்கு ஆதரவை அஜித் கொடுத்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய ரசிகர்களும் விஜய்க்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை கூட இப்படி மறைமுகமாக சிக்னல் மூலம் தெரியப்படுத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.
ஏனெனில் இதுவரை விஜய், அஜித், ரஜினி, கமல் என யாருமே அவரவர் பேசிய வசனங்களைத்தான் தன் படங்களில் வைப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் அஜித் இப்படி விஜய் டையலாக்கை பேச எப்படி முன் வந்தார் என்பதுதான் அனைவருக்குமான ஆச்சரியம். அதனால்தான் விஜயை அந்த இடத்தில் பார்க்க ஆசைப்படுகிறார் அஜித். அதை நேரடியாக சொல்ல முடியாது. இப்படியாவது சொல்லி தன் ரசிகர்களை விஜய் பக்கம் போக சொல்ல வாய்ப்பிருக்கும் என்பதற்காகக் கூட இருக்கலாம் என்று கோடம்பாக்கத்தில் பேசி வருகிறார்கள்.