More
Categories: Cinema News latest news

அஜித் போட்டிருக்கும் முகமூடி! பொங்கி எழுந்து வீடியோவை வெளியிட்டதற்கு இதுதான் காரணமா?

Actor Ajith: அஜித்தை பொறுத்தவரைக்கும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாத ஒரு நடிகர். ரசிகர்களை நேரில் வந்து சந்திப்பதும் இல்லை. சமூக வலைதளங்கள் மூலமாகவும் ரசிகர்களுடன் உரையாடுவதும் இல்லை. இந்த நிலையில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் அதிகமாக வைத்திருக்கும் நடிகராகவும் இருந்து வருகிறார்.

ஆனால் அஜித் மறைமுகமாக ஒரு அக்கவுண்ட் வைத்திருக்கிறார் என்றும் அதன் மூலம் வெளியே என்ன நடக்கிறது என்று அஜித் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ஏற்கனவே வலைப்பேச்சு டீம் கூறி வந்தார்கள். ஆனால் அது நிஜமாகவே உண்மை என்று இப்போதும் கூறியிருக்கிறார்கள். அதற்கு உதாரணம் தான் நேற்று வெளியான விடாமுயற்சி படத்தின் அந்த வீடியோதான்.

இதையும் படிங்க: முயற்சியிலேயே இருக்கும் ‘விடாமுயற்சி’! அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய ஆதிக்.. இதுதான் இள ரத்தம்-ங்கிறது

அந்த வீடியோ வெளியிட்டதற்கு முந்தைய நாள்தான் அஜித் கிரிக்கெட் வீரர் நட்ராஜனின் பிறந்த நாளில் கலந்து கொண்டார். அது சம்பந்தமான வீடியோ வெளியாகி பெரும் பேசு பொருளாக மாறியது. கடும் விமர்சனத்திற்கும் ஆளானார் அஜித். விடாமுயற்சி படத்தின் நிலைமை என்னவென்றே தெரியவில்லை. ஆனால் அஜித் ஜாலியாக ஊர் சுற்றுகிறார் என்றெல்லாம் கடுமையாக பேசிக் கொண்டிருந்தனர்.

இது அஜித் காதுக்கு சென்றதாகவும் அல்லது தன்னுடைய சீக்ரெட் அக்கவுண்ட் மூலமாக சமூக வலைதளங்களில் அவர் பார்த்திருப்பார் என்றும் கோடம்பாக்க வாசிகள் கூறினார்கள். அந்த விமர்சனத்தை எல்லாம் கேட்டு தாங்க முடியாத அஜித் பொங்கி எழுந்துதான் இந்த வீடியோவை வெளியிட சொல்லியிருப்பார் என்றும் கூறினார்கள். எவ்வளவு உயிர் கொடுத்து நடித்திருக்கிறோம் என ரசிகர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: வந்துட்டான்யா.. வந்துட்டான்யா.. வடிவேலு – பார்த்திபன் காம்போவில் பட்டையைக் கிளப்பிய படங்கள்!..

ஆனால் இந்த வீடியோவும் வெளியான பிறகு மேலும் அஜித்துக்கு சிக்கலாகவே போனது. ஏனெனில் அஜித் ரசிகர்களே அந்த வீடியோவை பார்த்து பரிதாப பட்டதுதான் மிச்சம். ஒரு படத்தின் அப்டேட் என்றால் அந்த ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கவேண்டும். ஆனால் இந்த வீடியோ ரசிகர்களை மேலும் மனவேதனைக்கு உள்ளாக்கியது. மேலும் ‘அஜித் காருக்குள் இருப்பது நீங்கள் மட்டும் இல்லை. இன்னொருவரும் இருக்கிறார். அதனால் சுற்றி இருப்பவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளுங்கள்’ என்றெல்லாம் அஜித்தை டேக் செய்து பல பேர் அவரவர் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Published by
Rohini

Recent Posts