எனக்கு இன்ஸ்பிரேஷனே இந்த நடிகர்தான்! ஒரே ஒரு பிட்ட போட்டு கோடி ரசிகர்களை கவர்ந்த ஆர்.ஜே.பாலாஜி

balaji
Actor RJ Balaji: தமிழ் சினிமாவில் ஒரு வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்டாக தனது கெரியரை ஆரம்பித்தவர் ஆர்.ஜே. பாலாஜி. அதன் பிறகு பல படங்களில் துணை நடிகராக நடித்து மக்களை வெகுவாக கவர்ந்தார். ரேடியோ ஜாக்கியாக இருந்த பாலாஜி படங்களில் வசனம் பேசும் போதும் வேகமாகவே பேசிவிடுவார்.
வடகறி, இது என்ன மாயம், எதிர்நீச்சல், நானும் ரௌடிதான் போன்ற பல படங்களில் தன்னுடைய நகைச்சுவை மூலம் மக்களை ரசிக்க வைத்தார். எல்.கே.ஜி படம் தான் அவர் ஹீரோவாக நடித்த முதல் படம். முதல் படமே பெரிய அளவில் ஹிட் அடித்தது.
இதையும் படிங்க: சிவக்குமாரின் பேச்சை கேட்காத சூர்யா – கார்த்தி?… எல்லா பிரச்சனைக்கும் இதுதான் காரணமா?!..
அதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் என தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து ஒரு தவிர்க்க முடியாத பிரபலமாக மாறினார் ஆர்.ஜே.பாலாஜி. இதில் மூக்குத்தி அம்மன் படத்தை நயனை வைத்து இயக்கி அதில் நடிக்கவும் செய்தார்.
அந்தப் படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இன்னொரு பக்கம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் வேலை செய்து வருகிறார். இப்படி பல வேலைகளில் பிஸியாக இருக்கும் ஆர்.ஜே. பாலாஜி தனக்கு இன்ஸ்பிரேஷனே இந்த நடிகர்தான் என நடிகர் அஜித்தை கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: அரைகுறை டிரெஸ்ல அழகை காட்டுறியே!.. தூக்கத்தை கெடுக்கும் பிரியங்கா மோகன்…
அதாவது ஒரு பேட்டியில் தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் அஜித் ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டால் அதன் பிறகு அவரை பற்றி பேச எந்த ஒரு வேலையும் இருக்காது. திரும்பவும் அடுத்த படத்தில் நடிக்கும் போதுதான் அவரை பற்றி பேச்சு வரும்.
அது மட்டுமில்லாமல் சமூக அக்கறை கொண்டவராகவும் இருக்கிறார். அதாவது ஓட்டு போடும் போது மக்களோடு மக்களாக கலந்து கொள்கிறார். இதை மட்டும் சரியாக செய்து விடுகிறார். அதனால் தனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக அஜித் இருக்கிறார் என ஆர்.ஜே.பாலாஜி கூறியிருக்கிறாராம்.