பணம் வேணும்னு கெஞ்சுனான்! அவன் ஒரு ஃபிராடு - அஜித்தால் படாத பாடுபட்ட தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் அஜித்தை பற்றி இதுவரை யாரும் பேசாத விஷயங்களை பிரபல சினிமா பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். மாணிக்கம் நாராயணன் வேட்டையாடு விளையாடு, முன்தினம் பார்த்தேனே, இந்திரலோகத்தில் நா அழகப்பன், சீனு, வித்தகன் போன்ற பல படங்களை தயாரித்தவர்.
கிட்டத்தட்ட பத்து படங்களை எடுத்துள்ள மாணிக்கம் நாராயணன் ஒரு சில படங்களின் தோல்வியால் மிகவும் துவண்டு போய் இருக்கிறார். இந்த நிலையில் அஜித்தை பற்றி மிகவும் கோபமாக பேசியுள்ளார். அதாவது 1996 சமயத்தில் அஜித்தின் அம்மா அப்பா ஊருக்கு போவதற்காக மாணிக்கம் நாராயணனிடம் அஜித் குறிப்பிட்ட தொகையை கடனாக பெற்றாராம்.
ஆனால் அதைப் பற்றி கேட்டால் அஜித்தின் மேலாளர் ஆன சுரேஷ் சந்திரா ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டு மிரட்டுகிறாராம். மேலும் அந்த நேரத்தில் அவரிடம் ஆதாரம் இல்லாததால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று மாணிக்கம் நாராயணன் கூறினார். ஆனால் இப்பொழுது அதற்கான செக் ஆதாரம் தான் கண்டுபிடித்து விட்டதாகவும் இப்போது மாட்டிக் கொண்டார் என்றும் மாணிக்கம் நாராயணன் கூறினார்.
மேலும் அஜித்தை பற்றி கூறிய மாணிக்கம் நாராயணன் அஜித் மகா நடிகன் என்பதற்கு இணங்க வாழ்க்கையிலும் நன்றாக நடிப்பார் என்றும் அந்த தொப்பையை வைத்துக்கொண்டு ஏதோ ஆடி சமாளித்துக் கொண்டு இருக்கிறார் என்றும் கூறினார். அதேபோல அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவை பிராடு என்றும் இவர் அஜித்திடம் போய் என்ன சொல்கிறார் என்றும் தெரியவில்லை என்றும் கூறினார்.
பணம் வாங்கிய சமயத்தில் அஜித்" தான் ஒரு பெரிய நடிகனாக வந்ததும் உங்களுக்காக ஒரு படம் பண்ணி தருகிறேன்" என்று கூறினாராம் .அதேபோல அவள் வருவாளா படத்திற்காக மாணிக்கம் நாராயணன் 15 லட்சத்தை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் .அப்போது கூட அஜித் "வேறொரு படத்திற்காக இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த படத்திற்கு வேண்டாம் "என்று சொல்லி மறுத்து விட்டாராம்.
மாணிக்கம் நாராயணன் தன்னுடைய மகன் திருமணத்திற்காக அஜித் வீட்டிற்கு பத்திரிக்கை வைக்க சென்றாராம் .சுரேஷ் சந்திரா அவரை உள்ளே விடாமல் அடித்து விரட்டி விட்டாராம்.
இதை குறிப்பிட்டு பேசிய மாணிக்கம் நாராயணன் இயல்பாகவே நான் திமிரு புடிச்சவன். நீ வரவில்லை என்றால் என் மகன் திருமணம் நடக்காதா என்ன. மேலும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு இவன் என்ன பண்ணான்? நடுத்தெருவுல தான் விட்டான் என்றும் மிகவும் ஆக்ரோஷமாக பேசினார்.
இதையும் படிங்க : கொஞ்ச நஞ்ச பேச்சா? சத்தமே இல்லாமல் 21 வருடங்கள் கடந்து ‘தேவர் மகன்’ படம் செய்த சாதனை!