அஜித்துக்கு சொன்ன கதையில் விஜய்!. பல வருட கோபம்!.. சேர வாய்ப்பே இல்லையாம்...

ajith
அஜித்தை வைத்து ‘தீனா’ என்கிற ஹிட் படத்தை கொடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்திலிருந்துதான் ரசிகர்கள் அஜித்தை ‘தல’ என அழைக்க துவங்கினார்கள். அப்போது அஜித்தின் படங்கள் சரியாக ஓடாத நிலையில் தீனா படத்தின் வெற்றி அவரின் மார்க்கெட்டை உயர்த்தியது. எனவே, அஜித்தின் குட்புக்கில் இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அதன்பின் ‘கஜினி’ படத்தின் கதையை அஜித்திடம்தான் கூறினார் முருகதாஸ். சில மாதங்கள் காத்திருக்க சொன்னார் அஜித். ஆனால், அதில் விருப்பமில்லாத முருகதாஸ் சூர்யாவிடம் சொல்லி கஜினி படத்தை எடுத்தார். இதிலேயே அஜித் கோபமடைந்துள்ளார். அதன்பின் அவர் ஏ.ஆர்.முருகதாஸை அழைக்கவில்லை. ஆனாலும், அஜித்தை விடாமல் பின் தொடர்ந்து ஒரு கதையை கூறினார் முருகதாஸ். அஜித்துக்கு பிடித்துப்போக ‘சரி கண்டிப்பாக செய்வோம்’ என உறுதியளித்தார்.

ajith
ஆனால், அதே கதையை விஜயிடம் கூறி படத்தை இயக்கினார் முருகதாஸ். அந்த படம்தான் ‘கத்தி’. இதிலும் செம காண்டாகியுள்ளார் அஜித். அதோடு, அந்த படத்தின் கதை ‘அறம்’ பட இயக்குனர் கோபி நாயனாரிடமிருந்து முருகதாஸ் திருடியது என அப்போது புகார் எழுந்ததால் முருகதாஸை மொத்தமாக ஒதுக்கிவிட்டாராம் அஜித்.

murugadas
‘நீங்கள் மீண்டும் எப்போது அஜித்துடன் இணைய போகிறீர்கள்’ என்கிற கேள்விதான் முருகதாஸிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி. அப்போதெல்லாம் நான் தயாராகத்தான் இருக்கிறேன் என்று மழுப்பி வந்தார் முருகதாஸ். ஆனால், இவ்வளவு நடந்துள்ளதால் முருகதாஸ் மீது கோபத்தில் இருக்கும் அஜித் இனிமேல் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வாய்ப்பே இல்லை என்றுதான் சினிமா உலகில் பேசிக்கொள்கிறார்கள்.

ajith
விஜயை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கினாலும், அதன்பின் அவர் கூறிய கதை பிடிக்காமல் லோகேஷ் கனகராஜுக்கு வாய்ப்பு கொடுத்தார் விஜய். இப்போது முருகதாஸை விஜயும் ஒதுக்கிவிட்டார். முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் வெளியாகி 4 வருடங்கள் முடிந்துவிட்டது. அதன்பின் அவர் படமே இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அவமானப்படுத்திய நடிகர் கார்த்திக்.. பெருந்தன்மையால் நிமிர்ந்து நின்ன ஆனந்தராஜ்.. இது செம மேட்டரு!..