ஒரு தமிழனா இருந்துட்டு விஜய் இத பண்ணக் கூடாது..அந்த வகையில் அஜித் நல்லவருப்பா! அரசியலுக்கான ஆப்பா?

by Rohini |
ajith
X

Ajith Vijay: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமைகளாக இருப்பவர்கள் விஜயும் அஜித்தும். ரஜினி கமலுக்கு பிறகு சினிமாவில் சொல்லிக் கொள்ளும் அளவு மிகப்பெரிய ஸ்டார்களாக விஜய் அஜித் ஆகிய இருவரும்தான் முன்னனியில் இருக்கிறார்கள். இருவர் படங்களும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இருவருக்கும் கோடிக்கணக்கான அளவில் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

இருவர் படங்களின் ஓப்பனிங்கும் இதுவரை பெரிய சாதனையாகவே பார்க்கப்பட்டது. இதில் விஜயின் அரசியல் பல தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் அரசியலுக்கு போய்விட்டால் எங்கள் பாடு திண்டாட்டம் தான் என்று சொல்லி வருகிறார்கள். அவர் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் கோட் திரைப்படம் மற்றும் அவரின் 69 வது படம் இவற்றோடு சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக செய்திகள் உலா வருகின்றது.

இதையும் படிங்க: தாங்கிக்கொள்ள முடியாத பிரிவு தொடங்கி சென்னையை வெறுத்த தருணம் வரை… ரஜினி வாழ்க்கையின் ஸ்பெஷல்!…

இந்த நிலையில் கோட் படத்தில் இரண்டு விஜய் என கூறப்பட்டு வந்த நிலையில் ஒரே விஜய்தான் ஆனால் இரு கேரக்டர்களாக நடிக்கிறார் என்று சமீபத்தில் ஒரு அப்டேட்டை இணையத்தில் கொழுத்தி போட்டிருக்கிறார்கள். மேலும் விஜயின் கோட் படத்தை பற்றியும் அவரின் அரசியலை பற்றியும் வலைப்பேச்சு பிஸ்மி ஒரு தகவலை கூறினார்.

தமிழ் நாட்டு அரசியல் வேண்டும் என ஆசைப்படும் விஜய் இப்பொழுது வரை அவர் படத்திற்கு ஆங்கில பெயரில்தான் தலைப்புகளை வைத்துக் கொண்டு வருகிறார். இதிலிருந்தே தெரிகிறது அவருடைய தமிழ் பற்று எந்தளவு இருக்கிறது என்று? அதுமட்டுமில்லாமல் ஹிந்தியை எப்படியாவது நம் தமிழ் நாட்டில் திணிக்க வேண்டும் என முயற்சித்து வருகிறார்கள். ஆனால் அது முடியாத காரியமாக நாம் அதை தடுத்து வருகிறோம்.

இதையும் படிங்க: அப்பா முதல் சல்மான்கான் வரை… தபுவின் வாழ்க்கையை சிதைத்த ஆண்கள்… வெறுத்துப்போய் செய்த காரியம்!…

இப்படி இருக்கும் சூழலில் விஜய் அரசியலுக்கு வருவது என உறுதியாகி விட்டது. இந்த கோட் படத்தின் தலைப்பையாவது மாற்றிக்கலாம். ஆனால் அந்த வகையில் அஜித் பரவாயில்லை. இத்தனைக்கும் அஜித் தமிழ் நாட்டை சார்ந்தவர் அல்ல. எனினும் அழகான தமிழ் பெயர்களையே தன் படத்திற்கு வைத்து வருகிறார் என பிஸ்மி கூறினார்.

Next Story