எம்ஜிஆருக்கு அடுத்தப்படியாக அஜித்!.. அவர வாழவிடுங்க.. சோவின் கருத்தை உறுதிபடுத்து வகையில் பேசிய மூத்த பத்திரிக்கையாளர்!..
தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் நகைச்சுவை நடிகராக இருந்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் நடிகர் சோ. நடிகராக மட்டுமில்லாமல் ஒரு பத்திரிக்கையாளராகவும் பணியாற்றியவர். ஆரம்பத்தில் இருந்தே எந்த ஒரு கருத்தையும் மூஞ்சிக்கு எதிராக பேசக்கூடியவர் சோ. அது யாராக இருந்தாலும் சரி அதற்கெல்லாம் கவலைப்படாதவர்.
தமிழ் சினிமாவில் மிகவும் மதிக்கக்கூடிய மனிதராகவும் கருதப்பட்டவர்தான் சோ. அவர் ஒருசமயம் பேட்டியில் குறிப்பிடும் போது சமகால நடிகர்களில் எம்ஜிஆருக்கு அடுத்தப்படியாக நான் கருதப்படுவது நடிகர் அஜித்தான். அவருக்குத்தான் மக்கள் மத்தியில் அதிகமான செல்வாக்கு இருக்கிறது என்று கூறினார். இதை பற்றி அவரை பின்பற்றி வந்த மற்றுமொரு பத்திரிக்கையாளரான மை.ப. நாராயணன் அஜித்தை பற்றி சில விஷயங்களை கூறினார்.
இதையும் படிங்க : “வாரிசு படம் தள்ளிப்போனதற்கு உண்மையான காரணம் இதுதான்”… ஓஹோ இதுதான் விஷயமா??
பத்திரிக்கையாளரும் நடிகருமான சோ சும்மா ஒரு நடிகரை பற்றி அவ்ளோ சீக்கிரம் பேசிட மாட்டார். அதையும் மீறி அஜித்தை அப்படி சொன்னார் என்றால் அது எந்த அளவுக்கு கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம். அதாவது ரசிகர்களிடம் உன் குடும்பத்தை பாரு, பாலாபிஷேகம் பண்ணாதே, தலையில் கர்ஷிஃப் கட்டாதே, நான் ஒரு நடிகன் தான், உங்களை மகிழ்விக்க மட்டும் தான் நான் இருக்கிறேன், எனக்காக ரொம்பவும் மெனக்கிட வேண்டாம் என்ற ஒரு நல்ல அறிவுரையை தான் வழங்கி வருகிறார் அஜித். மேலும் அவர் ஒரு சாதாரண மனிதராகத்தான் இருக்க ஆசைப்படுகிறார். மற்றவர்களை போல் வெளியில் வந்து சகஜமாக இருக்க ஆசைப்படுகிறார்.
ஆனால் கிடைத்த புகழால் அவரால் வெளியே வர இயலவில்லை. மேலும் அரசியல் ஆசை சுத்தமும் இல்லாத மனுஷன் அஜித். தன்னம்பிக்கைக்கு மறுபெயர் தான் சார் அஜித். ஒரு சின்ன காயம் பட்டாலே என்னமோ ஏதுனு பயப்படுகிற உலகத்தில் உடம்புல கிட்டத்தட்ட 30க்கும் மேல சர்ஜரிகளை செய்து கொண்டு இன்னும் விடாமுயற்சியுடன் உழைத்துக் கொண்டிருக்கிறாரே ! அவரை என்னவென்று சொல்வது.
அவரால் பலனடைந்தவர்கள் ஏராளம். ஆனால் அதை எதையும் வெளியில் சொல்லமாட்டார். பப்ளிசிட்டி பிடிக்காதவர் அஜித். அதனாலேயே அவர் செய்த பல காரியங்கள் வெளியே வரவில்லை என்று அந்த பத்திரிக்கையாளர் கூறினார். இவரின் கதாபாத்திரத்தில் தான் துணிவு படத்தில் பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.