மாசம் பொறந்தா 5 கோடியை வைக்கனும்!.. காம்ப்ரமைஸ் ஆகாத அஜித்.. சன்பிக்சர்ஸுடன் இருக்கும் பிரச்சினையே இதுதான்..

ajith
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் அஜித். அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகராகவும் இருந்து வருகிறார். வேலையில் மட்டுமே கருத்தாக இருக்கும் அஜித்திற்கு இந்தியா முழுவதும் கோடான கோடி ரசிகர்கள் இருக்கின்றனர்.

மற்ற நடிகர்களை போல் ரசிகர்களை சந்திப்பது, அவர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடுவது என இல்லாமல் இருக்கும் அஜித்திற்கு எப்படி இவ்ளோ ரசிகர்கள் என கோலிவுட்டே ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அஜித்தின் இந்த டெக்னிக்கும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இதை படிக்காதீங்க என சொன்னால் தான் நாம் அந்த புத்தகத்தில் அப்படி என்ன இருக்கிறது என தேடி போய் படிப்போம். அதே போல தான் ‘என்னை தேடி வராதீங்க, உங்கள் வேலையை பாருங்க’ என ரசிகர்களுக்கு அஜித் சொல்லும் அந்த அறிவுரையால் தான் அவரை சுற்றி ரசிகர்கள் வட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது அஜித் தன் அடுத்த படமான ஏகே 62 படத்திற்கான பேச்சு வார்த்தையில் இருக்கிறார். அது என்ன நிலைமையில் இருக்கிறது என்று ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. இந்த நிலையில் அதற்கு அடுத்தப் படத்தை மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைந்து பணியாற்ற அஜித் தயாராக இருக்கிறாராம்.
அதுவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் அந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறதாம். ஆனால் அஜித் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பணியாற்ற எப்போதுமே தயக்கம் காட்டுவது உண்டு. ஏனெனில் முதலில் அது ஒரு கார்ப்பரேட் நிறுவனம். ஏகப்பட்ட கண்டீசன்களை போடுவார்கள். முதலில் புரோமோஷன்களுக்கு வரச்சொல்லுவார்கள். அதற்கு அடுத்தப் படியாக தன்னுடைய சேனலுக்கு ஒரு பேட்டியை கொடுக்க சொல்லுவார்கள்.

ஆனால் இதில் எதுவுமே அஜித்திடம் நடக்காது. ஆனால் அதையும் தாண்டி சன்பிக்சர்ஸுடன் அஜித் இணைகிறார் என்றால் காம்ப்ரமைஸ் ஆனது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் என வலைப்பேச்சு அந்தனன் கூறினார். மேலும் ஒவ்வொரு படத்திற்கும்
அஜித் வாங்கும் சம்பளத்தில் முன் தொகையாக குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்வார்.
இதையும் படிங்க : யாரும் தரல!..கமல்தான் ஹெல்ப் பண்ணார்!.. ஷோபனா சொன்ன சீக்ரெட்!…
அதன் பிறகு மீதி பணத்தை மாசம் மாசம் முதல் தேதியில் 5 கோடி என வாங்கி கொள்வாராம். இந்த விஷயத்தில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பிரச்சினை இருக்காது. பண விஷயத்தில் சரியாக நடக்கக் கூடிய பெரிய நிறுவனம் தான் சன்பிக்சர்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்துடன் அஜித்தை சேர்ப்பதற்கு சிறுத்தை சிவா தான் உதவி செய்தார் என்று அந்தனன் கூறினார்.