பிறந்தநாள கொண்டாடக் கூடாதா?.. பிரசாந்த் - அஜித் புகைப்படத்தால் வந்த பிரச்சினை!..
தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றனர். இவர்கள் நிரந்தரம் , இவர்கள் நிரந்தரமில்லாதவர்கள் என்று அவர்களின் அதிர்ஷ்டங்களை பொறுத்து தான் அமையும். இன்றளவும் நாம் நடிகர் திலகம், மக்கள் திலகம், காதல்மன்னன் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றால் அவர்களின் திறமையையும் தாண்டி அதிர்ஷ்டம் என்ற ஒன்றும் இருக்கின்றது.
அதற்காக மற்றவர்களை குறை கூறி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்த வகையில் ஒரு காலத்தில் விஜய் , அஜித் இவர்களையெல்லாம் ஓவர் டேக் செய்து வெற்றி கொடி நாட்டிக் கொண்டு வந்தார் நடிகர் பிரசாந்த். ஒவ்வொருவருக்கும் ஒரு அடைமொழி இருப்பதால் பிரசாந்திற்கும் டாப் ஸ்டார் என்ற அடைமொழியிட்டே கூறிவந்தனர்.
என்றைக்கு அவர்தான் டாப் ஸ்டார் என்று சொல்லுமளவிற்கு அவரது அப்பாவான தியாகராஜன் அவரை நன்முறையில் வழி நடத்திக் கொண்டு வந்திருக்கிறார். பெரிய வளர்ச்சியை எட்டிய போது பிரசாந்திற்கு திடீரென ஒரு சறுக்கு ஏற்பட்டது. அதுதான் அவரது திருமண உறவில் ஏற்பட்ட விரிசல். அந்த ஒரு சம்பவம் தான் அவரை சினிமாவில் மேலும் மேலும் வளர்ச்சியை எட்ட முடியாமல் தடுத்தது.
இல்லையெனில் இன்று பல பேர் கொண்டாடப்படும் நடிகராக பிரசாந்த் மாறியிருப்பார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. தமிழ் சினிமாவில் இவருக்கு மட்டும் தான் அதிகமான ரசிகர்கள் மலேசியா , சிங்கப்பூரில் இருந்தனர். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவை ஆட்சி செய்தார் ஒரு காலகட்டத்தில்.
அந்த சமயம் தான் பிரசாந்தும் அஜித்தும் சேர்ந்து நடித்த படம் கல்லூரி வாசல் படப்பிடிப்பு போய்க் கொண்டிருந்தது. அந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 5ஆம் தேதி முடிவடைந்து மறு நாள் பிரசாந்தின் பிறந்த நாளை கொண்டாட சென்னை வருவதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாம். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் படப்பிடிப்பு நீண்டு கொண்டே போக தியாகராஜன் பிரசாந்தை பிறந்த நாளை கொண்டாட சென்னை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.
எப்போதும் எங்கு இருந்தாலும் தன் பிறந்த நாளை சென்னையில் தான் கொண்டாடுவாராம் பிரசாந்த். இந்த ஒரு காரணத்தினால் படப்பிடிப்பு நடந்த ஊட்டியிலேயே படக்குழுவுடன் கொண்டாடுமாறு அவரது அப்பா சொல்லிவிட ஊட்டியிலேயே கொண்டாடியிருக்கிறார். அவருக்கு பிறந்த நாள் என்று தான் அவருக்கு மட்டும் மாலை போட்டு போட்டோ எடுத்திருந்திருக்கின்றனர். அந்த போட்டோவில் பின்னாடி அஜித் நிற்க இது ஏதோ அஜித்தை அவமதித்தாரா பிரசாந்த் ? என்ற செய்தி அந்த நேரத்தில் மிகவும் வைரலாகியிருக்கின்றது. இந்த உண்மையை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.
இதையும் படிங்க : விஜய் கதை கேட்கும் ஸ்டைலே வேற!.. எஸ்.ஏ.சி சொன்ன மாஸ் தகவல்..