Categories: Cinema News latest news

மகிழ்திருமேனிக்கு அஜித் கொடுத்த ஷாக்!.. மறுபடியும் முதல்ல இருந்தா!. அட போங்கடா!..

அஜித்தின் அடுத்த படத்தின் பெயர் விடாமுயற்சி என்றும் அதனை மகிழ்திருமேனி தான் இயக்கப் போகிறார் என்றும் பல மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன் பிறகு அந்த படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த மாதம், இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல் வெளியானது. ஆனால் இரு தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படம் வெளியானது.

எனவே அவர் மீண்டும் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டார். படப்பிடிப்பு தொடங்குவது சந்தேகம் தான் என்று கூறப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனையடுத்து விடாமுயற்சி படம் கைவிடப்பட்டது என்றும் சிலர் பேசிவருகின்றனர். இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் கதையை அஜித் மாற்ற சொல்லிவிட்டார் என்று பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- ‘விடாமுயற்சி’யை டம்மி பீஸாக மாற்றிய ரஜினி! செம ஃபார்முலதான் இருக்காரு – பருந்துனா சும்மாவா?

அந்த பேட்டியில் விடாமுயற்சி படம் கைவிடப்படவில்லை. இந்த மாதம் 2ம் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கிவிடும். முதலில் நடிகர் அஜித்துக்கு மகிழ்திருமேனி சொன்ன கதை திருப்திகரமாக இல்லை, அதனால் 2 முறை கதையில் மாற்றம் செய்தனர். அதன் பிறகு அஜித்திடம் கதையின் முழு ஸ்கிரப்டையும் மகிழ்திருமேனி கொடுத்துவிட்டார்.

ஆனால் அஜித் இன்னும் அதனை படிக்கவில்லை. மேலும் மகிழ்திருமேனி எப்போதும், தனக்கு திருப்தி அளிக்கும் வரை ரீ டேக் எடுத்துக்கொண்டே இருப்பார். ஆனால் பொதுவாக பெரிய நடிகர்கள் ஒரு காட்சியை 2 முறைக்கு மேல் நடிக்க மாட்டார்கள். அதுவும் கூட அஜித்துக்கு தயக்கம் ஏற்பட ஒரு காரணமாக இருக்கலாம். சொன்ன நேரத்தில் படத்தை முடிக்காமல், தாமதமாகிவிடுமோ என்று கூட அவர் யோசிக்கலாம் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- அந்த விஷயத்துல எப்பவுமே விஜய் தான் டாப்!! ரஜினியால கூட முந்தவே முடியாதாம்!

Published by
prabhanjani