உங்க ஜம்பம் எதுவும் இவர்கிட்ட பலிக்காது!.. இதுவரை உதயநிதியை சந்திக்காத ஒரே நடிகர்!..
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வெளியாகும் பெரும்பாலான படங்கள் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தான் வெளியாகிக் கொண்டிருக்கிறது. சின்ன படங்கள் முதல் மிகப்பெரிய பட்ஜெட் அளவிலான படங்கள் வரை அனைத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வாங்கி திரையிட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கு ஒரு தரப்பு சினிமாவில் ஒரு ஆளாக இருந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்றும் தியேட்டர்களை கட்டுப்படுத்துகிறார்கள் என்றும் புகார்கள் வந்தன. ஆனாலும் உதயநிதி அதற்கெல்லாம் அஞ்சுவதாக இல்லை. மேலும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ஒரு திறந்த புத்தகமாக இருக்கின்றது என்றும் கமல் ஒரு மேடையில் கூறியிருக்கிறார்.
அதாவது படத்தின் வெற்றி மூலம் கிடைக்கும் வருவாயில் 30 சதவீதம் மட்டுமே எடுத்துக் கொண்டு மீதமுள்ள 60 சதவீதத்தை தயாரிப்பாளர்களிடமே கொடுத்து விடுவதாகவும் வரவு செலவு கணக்குகளை திறம்பட மேற்கொள்கிறார்கள் என்றும் விக்ரம் பட விழாவில் கமல் கூறியிருந்தார்.
இதனாலேயே தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்கள் ரெட் ஜெயண்டை நோக்கி பயணிக்கின்றது. மேலும் ரெட் ஜெயண்ட் எந்த படத்தின் உரிமையை வாங்கினாலும் அது சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் முதல் நடிகர்கள் வரை உதயநிதியை சந்தித்து விட்டு தான் செல்வார்கள். ஏன் விக்ரம் பட உரிமையை வாங்கியதும் கமல் 4 முறை சந்தித்திருக்கிறார் என்று பயில்வான் ரெங்கநாதன் கூறினார்.
இப்படி சிறிய நடிகர்கள் முதல் முன்னனி நடிகர்கள் வரை அனைவரும் உதயநிதியை பட சம்பந்தமாக சந்தித்து விட்டு செல்ல சமீபத்தில் ரிலீஸான துணிவு படத்தின் ஹீரோ அஜித் மட்டும் உதயநிதியை சந்திக்க வில்லை. சொல்லப்போனால் ரெட் ஜெயண்ட் வாங்கியிருந்ததனால் தான் ஓரளவு தியேட்டர்கள் பிரித்து வாரிசு படத்தோடு மோத முடிந்தது. இதுவே அதன் உரிமையை வேறு யாராவது வாங்கியிருந்தால் வாரிசு படத்தின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்திருக்கும்.
ஆனால் ஒரு மரியாதை நிமித்தமாக கூட அஜித் அவரை சந்திக்க வில்லை. ஏன் தொலைபேசியில் கூட பேசியிருக்க மாட்டார். இதை பற்றி கேட்டால் என் வேலை நடிப்பது மட்டுமே என்று நேக்கா பதில் சொல்லி விலகிறுவார் நம்ம தல. இதன் மூலம் பட சம்பந்தமாக உதய நிதியை சந்திக்காத ஒரே நடிகர் அஜித் தான் என்று பயில்வான் ரெங்கநாதன் கூறினார்.
இதையும் படிங்க : மகனின் ஆசைக்காக கடல் தாண்டி நெப்போலியன் செய்த செயல்!.. இப்படி ஒரு தகப்பனா?.. மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்!..