டாப் 6 நடிகர்களில் அஜித்திற்கு மட்டும் நடக்காத ஒன்னு.. சொல்லமுடியாத வருத்தம் தான்..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வரும் அஜித் சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் மூலம் மேலும் ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். மேலும் வாரிசு படத்தோடு ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி துணிவு படம் நல்ல வரவேற்பை பெற்றது.
வாரிசு படம் ஆரம்பமான நேரத்தில் விஜயை புதுசாக பார்க்கப் போகிறீர்கள் என்று சொன்ன பல ஊடகச்செய்திகள் துணிவு படத்தில் தான் அந்த செய்தி உண்மையானது. இதுவரை நடித்த அஜித்திற்கும் துணிவு படத்தில் நடித்த அஜித்திற்கு ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருந்தன. அனைவரும் ரசித்து மகிழ்ந்தனர்.
அதனாலேயே மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இப்படி தமிழ் சினிமாவில் டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் பாக்ஸ் ஆஃபிஸிலும் சரி விமர்சன ரீதியிலும் சரி ஒரு உச்ச நடிகராக இருந்து வருகிறார். ஆனால் அப்படிப்பட்ட நடிகர்களுக்கே உள்ள பெருமையாக ரசிகர்கள் கருதுவது ‘அப்பா என் தலைவன் சங்கர் படத்துல நடிச்சிருக்காரு, மணிரத்னம் சார் படத்துல நடிச்சிருக்காரு’ என்பது தான்.
ஆனால் சங்கர் மற்றும் மணிரத்னம் ஆகியோரின் படங்களில் மட்டும் இதுவரை அஜித் நடிக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் நடிக்க வரும் எந்த ஒரு புதுமுகமோ அல்லது ஓரளவு வரவேற்பை பெற்ற நடிகர்களோ சொல்வது இதுதான், எப்படியாவது சங்கர் சார் படம் அல்லது மணிரத்னம் சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான், ஆனால் அஜித் இங்கேயும் சரி வெளி நாடுகளிலும் சரி வசுலை குவித்து வரும் நிலையில் இன்னும் அவர்களுடன் ஒரு படம் கூட நடிக்கவில்லை.
சொல்லப்போனால் டாப் 6 நடிகர்களில் அஜித் மட்டும் தான் இந்த இரு இயக்குனர்களுடன் பணிபுரியாத ஒரே நடிகர். ரஜினி, கமல், விக்ரம், விஜய், சூர்யா உட்பட அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் சங்கர் மற்றும் மணிரத்னம் படங்களில் பணிபுரிந்திருக்கின்றனர். ஆனால் அஜித்திற்கு மட்டும் அந்த வாய்ப்பு இன்னும் வரவில்லை.