பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்!..எல்லாத்துக்கும் அஜித்தே காரணம்..இது தெரியாம போச்சே!...
நல்ல கதை மற்றும் திரைக்கதை அமைப்பதில் ஹெச்.வினோத் கில்லாடி, ஒரு படத்துக்காக மெனக்கட்டு பல வருடங்கள் உழைக்கிறார். அதனால்தான் அவரால் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற படங்களை எடுக்க முடிகிறது என இயக்குனர்களே அவரை பாராட்டினர். ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘வலிமை’ அவர் மீது இருந்தை இமேஜை சுக்கு நுறாக்கி இருக்கிறது.
பைக் கும்பலை வைத்துக்கொண்டு குற்றச்செயல்களை பிடிக்கும் போலீஸ் அதிகாரின் கதைதான் வலிமை. இதில், தேவையில்லாத செண்டிமெண்ட் மற்றும் அழுகை காட்சிகள், பல படங்களில் பார்த்த பில்டப்புகள் படத்தின் சுவாரஸ்யத்தை குறைத்தன. அதிலும் 2ம் பாதியில் இடம் பெற்றிருந்த பல செண்டிமென்ட் காட்சிகள் தியேட்டரில் ரசிகர்களை பெரிதும் சோதித்தது. எனவேதான், இப்படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்கள் எழுந்தது. இது வினோத் படம் போலவே தெரியவில்லை. விவேகம் படம் போல இருக்கிறது என பலரும் கூறினர்.
இதையும் படிங்க: பிக்பாஸில் இருந்து கமல் வெளியேற இதுதான் காரணம்… உண்மையை போட்டு உடைத்த வனிதா…!
இந்நிலையில், இதற்கு காரணமே அஜித்தான் என விபரம் தெரிந்தவர்கள் மூலம் செய்தி கசிந்துள்ளது. படத்தை முழுவதுமாக எடுத்து முடித்துவிட்டு அதன் ரஷ் பார்க்கையில் எல்லோருக்கும் படம் பிடித்துப்போனாலும் படு ரிச்சாக ஒரு இங்கிலீஷ் படம் போல ஸ்டைலாக வந்திருக்கிறது. அதை நம்மூர் ஸ்டைலுக்கும் கொஞ்சம் லோக்கலாக மாற்ற வேண்டும் என கட்டளை போட்டிருக்கிறார் அஜித்.
எந்த விதத்திலும் இந்த படத்துக்கு அது தேவையில்லை என்றாலும் என் ரசிகர்களுக்காக கொஞ்சம் லோக்கலாக செண்டிமெண்டாக நான் உருகி கொஞ்சம் அழவேண்டும். ஏனெனில் இதற்கு முந்தைய படத்தில் (விஸ்வாசம்) அந்த செண்டிமெண்ட் தான் ஜெயிக்க வைத்தது என சொன்னாராம். ஆடிப்போன இயக்குனர் பலவாறாக சமாதானம் பேசியிருக்கிறார்.. ஆனால் இதை நீங்கள் எனக்காக செய்தே ஆக வேண்டும் என்றதும்.. வேறு வழியில்லாமல் பதமாக கிண்டிய கேசரி அல்வாவில் தேங்காய் சட்னியை (செண்டிமெண்ட்) கொட்டியிருக்கிறார் வினோத் என சிரிக்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்..
தற்போது, கவலையை விடுங்க அடுத்த படத்துல சரி பண்ணுவோம் என இயக்குனரிடம் சமாதானம் பேசியுள்ளார் அஜித். விவேகம் படத்தையும் இப்படித்தான் கெடுத்தார் அஜித். அதனால்தான், அதே சிவாவுக்கு மீண்டும் விஸ்வாசம் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். அது போலத்தான் இப்போது வினோத்துக்கும்....
அந்த படம் எப்படி வருமோ?.. பொறுத்திருந்து பார்ப்போம்...