சொன்னா நம்பமாட்டீங்க.. எனக்கும் அஜித்துக்கும் வாடா போடா நட்பு!.. ஆனால் இப்போ?.. பிரமிப்பில் திரைப்பிரபலம்..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். துணிவு படத்தின் வெற்றி இன்னும் இவருக்கு மேலும் பெருமை சேர்த்திருக்கின்றது. அடுத்ததாக விக்னேஷ் சிவனுடன் புதிய படத்தில் இணைய இருக்கிறார் அஜித். மனதில் தோன்றுவதை செய்பவர் தான் அஜித்.
மற்றவர்களுக்கு தன் கொள்கையை மாற்றக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருப்பவர். மற்ற நடிகர்களில் இருந்தும் கொஞ்சம் வித்தியாசமானவரும் கூட. ஆரம்பகால பேட்டிகளை பார்த்திருந்தால் அன்றிலிருந்து இன்று வரை ஒரே மாதிரியாக தான் இருக்கிறார் அஜித்.
என் வேலை நடிப்பது, ரசிகர்களை ரசிக்க வைப்பது, இதை தான் செய்வேன். அதற்காக யாரிடம் அடிபணிய வேண்டும் என்பது இல்லையே. இதை தான் இன்று வரை கடைப்பிடித்து வருகிறார். விஜய் அளவுக்கு நண்பர்கள் வட்டாரம் யாரேனும் இருக்கிறார்களா? என்றால் அதையும் ரகசியமாகத்தான் வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க : கண்ணை காட்டிய ஸ்ரீதேவி… அடம்பிடித்த ரஜினி.. ஆனால் பாட்டு செம ஹிட்டு!…
யாரிடம் பழகுவார், யாரிடம் மனம்விட்டு பேசுவார் என்பது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. இந்த நிலையில் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த ஜீவன் நடிகர் அஜித்தை பற்றி ஒரு பேட்டியில் கூறினார். அனைத்து முன்னனி நடிகர்களுடன் சேர்ந்து பணிபுரிந்தவர் ஜீவன்.
நடிகர் அஜித்துடன் முதன் முதலில் பணியாற்றிய படம் ‘ஆசை’. அந்த சமயத்தில் இருவரும் ஒரே வயதுடையவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். வாடா போடா என்ற அளவிற்கு தான் அஜித் பழகினாராம் ஜீவனிடம். அப்பொழுது கூட ஒளிப்பதிவாளர் ஜீவன் அஜித்திடம் நீங்கள் ஒரு நடிகராக இருந்து கொண்டு என்னிடம் சகஜமாக எப்படி பழகுகிறீர்கள் என்று கேட்டதற்கு உடனே கோபப்பட்டு விட்டாராம். அந்த அளவுக்கு இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகியிருக்கிறார்கள்.
ஆனால் நானும் அஜித்தும் வாடா போடா என்று தான் பேசுவோம் என்று சொன்னால் சிரிப்பார்கள், நம்பமாட்டார்கள், அவரு எங்கேயோ போய்விட்டார், யாரும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறார் என்று ஒளிப்பதிவாளர் ஜீவன் அந்த பேட்டியில் கூறினார்.