விஜய் சொல்லாதத அஜித் என்கிட்ட சொன்னாரு! இவ்ளோ பர்ஷனல இப்படியா ஓப்பனா சொல்றது?
Ajith - Vijay: இன்று ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் கொண்டாடக் கூடிய நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இருவருமே மாஸ் காட்டும் ஹீரோக்களாக வசூலை அள்ளும் சக்கரவர்த்திகளாக இருந்து வருகிறார்கள்.
ரஜினி - கமல் இவர்களுக்கு அடுத்தபடியாக மக்கள் அபிமானங்களை ஒட்டுமொத்தமாக பெற்ற நடிகர்களாக இவர்கள் தான் இருக்கிறார்கள். ஒன்றாகவே சினிமா கெரியரை ஆரம்பித்து சமமான வெற்றி தோல்விகளை பார்த்து இன்று எட்டமுடியாத உயரத்தில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் கடின உழைப்பும் முயற்சியும்தான்.
இதையும் படிங்க: சின்னவீடு படத்தால் நடந்த களேபரம்… கடைசியில் மன்னிப்பே கேட்கும் நிலைக்கு போனாராம் பாக்கியராஜ்..!
எத்தனை எத்தனை விமர்சனங்களை கடந்து வந்திருப்பார்கள். ஆனால் அவற்றை எல்லாம் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் தன் வேலையில் லட்சியத்தில் மட்டுமே குறிக்கோளாக இருந்து இந்த உயரத்தை அடைந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் பிரபல நடிகையான சத்யப்ரியா இவர்கள் இருவரை பற்றியும் சில சுவாரஸ்ய சம்பவங்களை கூறினார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் இன்றுவரை சிறப்பான நடிப்பை கொடுத்து வருபவர் சத்யப்ரியா. பல படங்களில் ஹீரோக்களுக்கு அம்மாவாகவும் மாமியாராகவும் நடித்திருப்பார்.
இதையும் படிங்க: தளபதி படத்தில் க்ளைமேக்ஸை சொதப்பிய மணிரத்னம்… இப்படி இருந்தா வேற லெவல்.. இயக்குனர் சொன்ன சர்ப்ரைஸ்..!
அதே போல் அஜித், விஜய் இவர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார். விஜய் அந்தளவுக்கு யாரிடமும் பேச மாட்டார் என்றும் சூட்டிங் ஸ்பாட்டில் அந்த காட்சிகளில் நடிக்கும் போது வரைதான் இந்த நட்பு. அதன் பிறகு அந்தளவுக்கு பேசமாட்டார் என்றும்,
ஆனால் அஜித் அப்படி இல்லை என்றும் அனைவரிடமும் நன்கு பழக கூடிய நடிகர் அஜித் என்றும் அவரின் காதல் கதையை என்னிடம் பகிர்ந்திருக்கிறார் என்றும் எங்கள் திருமணம் நல்ல படியாக நடக்க வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள் என்று அஜித் சத்யபிரியாவிடம் கேட்டதாகவும் அந்த பேட்டியில் சத்யப்ரியா கூறினார்.
இதையும் படிங்க: செம்பு தூக்கியாவே மாத்திட்டானுங்க! மிஷ்கினை வச்சு செய்யும் நெட்டிசன்கள் – 2040ல் இப்படியா இருப்பாரு?