சூர்யாவை விட அஜித் எனக்கு ஸ்பெஷல்! அப்போ ஜோதிகாவுக்கு இதுலதான் interest போல

Published on: December 26, 2023
jothi
---Advertisement---

Actress Jyothika: தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. சிம்ரன் , ஜோதிகா இருந்த நேரத்தில் இவர்கள்தான் டாப் ஹீரோயின்களாக வலம் வந்து கொண்டிருந்தார்கள். இன்றைய சினிமா மாதிரி புது புது நடிகைகளின் வரவு என்பது அவர்கள் இருந்த நேரத்தில் மிகக் குறைவுதான்.

சொல்லப்போனால் பத்துவருடங்களாக கோலிவுட்டையே தன் வசம் வைத்திருந்த நடிகைகளாகவே இவர்கள் இருந்தார்கள். அதன் பிறகே சினிமாவின் போக்கும் மாற மாற சினிமா வைத்திருந்த அடிப்படை பண்புகளும் காலத்திற்கேற்ப மாறிக் கொண்டே இருக்கின்றன.

இதையும் படிங்க: இத இதத்தான் எதிர்பார்த்தோம்!.. இடுப்பு மடிப்பை காட்டி இழுக்கும் திவ்யா துரைசாமி..

திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதா என்று முடிவு செய்த பிறகே அந்தப் படத்திற்குள் வருகிறார். திருமணத்திற்கு பிறகு வெளியான ஜோதிகாவின் படங்கள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியே அமைந்திருந்தன.

அதனால் இன்னும் மக்கள் மத்தியில் ஜோதிகாவின் ஸ்டேட்டஸ் இன்னும் அதிகரித்தது. சமீபத்தில் கூட ஜோதிகா நடித்த மலையாள படமான காதல்  தி கோர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதில் ஜோதிகாவின் நடிப்பும் பாராட்டப்பட்டது.

இதையும் படிங்க: மீனா-முத்துவை வெளியேத்த ரவுண்ட் கட்டிய விஜயா..! சிறகடிக்க ஆசையில் நடக்க இருக்கும் அடுத்த களேபரம்..!

இந்த நிலையில் ஜோதிகா சமீபத்தில் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவருடைய அனுபவங்கள், குடும்பம் என எல்லாவற்றையும் மிக வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில் அஜித்தைப் பற்றியும் ஜோதிகா ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறினார்.

அதாவது அஜித் எனக்கு ஸ்பெஷல் என்று கூறி அதற்கான காரணத்தையும் கூறினார். நடிப்பு என பார்க்கும் போது சூர்யாவுடன் நான் நடித்த ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படம் தான் எனக்கு முதல் படம். ஆனால் ரிலீஸ் என்று பார்க்கும் போது அஜித்துடன் நடித்த ‘வாலி’ திரைப்படம்தான் என முதல் ரிலீஸ் படம்.

இதையும் படிங்க: மீண்டும் 80களுக்கு அழைத்துச் செல்லும் இளையராஜா…… இது எந்தப் படத்தில் தெரியுமா?

வாலி படத்தின் போது எனக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. ஆனால் அஜித்துக்கு ஹிந்தி நன்றாக பேச தெரியுமாம். அதனால் செட்டில் ஜோதிகாவுடன் அஜித் ஹிந்தியில்தான் உரையாடிக் கொண்டிருந்தாராம். அதனால்தான் கருத்து பரிமாறுதலில் ஏற்படும் பிரச்சினை எனக்கு அந்தப் படத்தில் இல்லாமல் இருந்தது என ஜோதிகா கூறினார். ஜோதிகாவை பொறுத்தவரைக்கும் தமிழ் மொழி போல ஹிந்திக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் என அவருடைய பல பேட்டிகளில் புரிந்து கொள்ள முடிகிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.