அஜித்தை கடுப்பாக்கிய நடிகர்!.. ஆனால் வெளியில காட்டாமாட்டாரே!.. அவர் பண்ணது தான் ஹைலைட்..
தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரும் அஜித் இப்போது தனது 62 வது படத்தின் வேலைகளில் தயாராகிக் கொண்டிருக்கிறார். இதற்கு முன் வெளியான ‘துணிவு’ படத்தின் வெற்றி இன்னும் மக்களால் ரசித்துக் கொண்டிருக்கப்படுகிறது. அந்தப் படத்தில் இதுவரைக்கும் பார்த்திராத ஒரு அஜித்தை ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
தனது காயங்களையும் பொருட்படுத்தாமல் தன்னை நம்பி வரும் தயாரிப்பாளர்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாத வகையில் படம் நடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அஜித். அஜித் பத்திரிக்கையாளர்களையோ அல்லது பொது வழியில் ரசிகர்களை சந்திப்பதையோ மறுத்து வந்தாலும் அவருக்கு நெருக்கமானவர்கள், அவரைப் பற்றி தெரிந்தவர்கள் மூலம் அஜித்தை பற்றி தகவல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த வகையில் மெட்டில் ஒலி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் போஸ் வெங்கட். அந்த சீரியலில் கிடைத்த வெற்றி பல படங்களில் நடிக்க போஸ் வெங்கட்டிற்கு வாய்ப்பு கிடைக்க உதவியாக இருந்தது. பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும் துணை நடிகராகவும் நடித்து வருகிறார்.
அதுவும் போல சீரியல்களிலும் நடித்து வரும் போஸ் வெங்கட் சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் இருந்து வருகிறார்.
அப்படி ஒரு சமயம் அஜித்தின் ‘வீரம்’ படத்திற்காக டப்பிங் பேச போஸ் வெங்கட்டிற்கு வாய்ப்பு வந்திருக்கிறது. சிறுத்தை சிவாவும் போஸ் வெங்கட்டும் சிறந்த நண்பர்களாம். அதனால் சிறுத்தை சிவாவிடம் அஜித்தை பார்க்க அனுமதி வாங்கிக் கொடுக்கும் படி போஸ் வெங்கட் கேட்டுள்ளார்.
வெங்கட் சொன்ன ஒரு மணி நேரத்தில் அஜித் சார் கூப்பிடுகிறார் என்று அழைப்பு வந்திருக்கிறது. உடனே வெங்கட் போக அங்கு அஜித் காத்துக் கொண்டிருந்தாராம். பார்த்ததும் ‘ஹாய் போஸ்’ என்று அஜித் சொல்லியிருக்கிறார். வெங்கட்டும் போய் கொஞ்சம் பதறி உட்கார்ந்து கொண்டிருந்தாராம். அதை பார்த்து அஜித் ‘ரிலாக்ஸா உட்காருங்க, அஜித் என்ற நடிகர் என்பதை மறந்து விடுங்கள், நானும் சாதாரண மனுஷன் தான்’ என்று சொன்னாராம்.
மேலும் பயம் கலந்த மரியாதையுடனே வெங்கட் உட்கார ‘ நானே ஸ்டிரஸா இருக்கேன், நீங்களும் என்னை ஸ்டிரஸா ஆக்காதீங்க, கூல் பண்ணுங்க, ஜாலியா எதாவது பேசுங்க’ என்று சொன்னாராம் அஜித். அதன் பிறகே போஸ் வெங்கட் ரிலாக்ஸ் ஆகி பேச ஆரம்பித்தாராம். அதன் பிறகும் விஸ்வாசம், வேதாளம், போன்ற படங்களுக்கும் போஸ் வெங்கட்டிற்கு வாய்ப்பு வர ஏதோ ஒரு காரணத்தால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். இந்த தகவலை போஸ் வெங்கட் ஒரு பேட்டியின் போது கூறினார்.
இதையும் படிங்க : இப்படி பப்ளிக்கா காயப்படுத்துறாங்களே!… மனம் குமுறி கதறிய எம்.எஸ்.பாஸ்கர்… என்ன நடந்து தெரியுமா?