கை மாறிய அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் படம்!. என்னப்பா ஒரே டிவிஸ்ட்டா இருக்கே!...
Ajith kumar 63: திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். ஜிவி.பிரகாஷ் நடித்த அந்த படத்தில் பல கிளுகிளுப்பான காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றிருந்தது. ஆனாலும், அனைவரும் ரசிக்கும்படி திரைக்கதையும், காட்சிகளையும் வைத்து சிரிக்க வைத்தார்.
இதனால் அந்த படம் வெற்றியை பெற்றது. அதோடு அதன்பின் அவர் இயக்கத்தில் வந்த எந்த படமும் வெற்றியை பெறவில்லை. சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்கிற படத்தை இயக்கினார். இப்படத்திற்கு சிம்பு ஒழுங்காக படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. எனவே, அரைகுறையாக படத்தை எடுத்து ரிலீஸ் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தலைவர் 171 படத்தில் அந்த நடிகர்!.. ஒருவழியா நடந்திடுச்சிப்பா!.. ஆசையை நிறைவேற்றிய லோகேஷ்..
படமும் படு தோல்வி. இந்த படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பனுக்கு ரூ.10 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட, இதற்கு காரணம் சிம்புதான் என அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். அந்த பஞ்சாயத்து பல வருடங்களாக நடந்து வருகிறது. அதன்பின் பிரபுதேவை வைத்து பகீரா என்கிற படத்தை ஆதிக் இயக்கினார். அந்த படமும் ஊத்திக்கொண்டது.
அதன்பின்னர் இந்த முறை வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்கிற வெறியில் அவர் இறங்கி அடித்த திரைப்படம்தான் மார்க் ஆண்டனி. விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனால், தயாரிப்பாளர்களின் பார்வை ஆதிக் ரவிச்சந்திரன் பக்கம் திரும்பியுள்ளது.
இதையும் படிங்க: கிரேட் எஸ்கேப்!.. அஜர்பைஜானில் விடாமுயற்சி டீம் சந்தித்த பிரச்சனை.. அப்ப இதுதான் காரணமா
நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தபோது அஜித்துடன் அவருக்கு பழக்கம் ஏற்பட இப்போது அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பே அவருக்கு கிடைத்துள்ளது. விடுதலை, விடுதலை 2 உள்ளிட்ட பல படங்களின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது.
இந்நிலையில், எல்ரெட் குமார் கையிலிருந்து இப்படம் தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர் படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் கைக்கு சென்றுவிட்டது. விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து கொண்டே போவதால், அஜித் படத்தில் கவனம் செலுத்த முடியாத நிலை எல்ரெட் குமாருக்கு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பட்ஜெட்டுகளில் படமெடுக்கும் பெரிய நிறுவனம் என்பதால் தாராளமான செலவும் செய்வார்கள். அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகிய இருக்கும் அதிக சம்பளத்தையும் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஃபர்ஸ்ட் டைம் சொல்றேன்! இந்த வலி யாருக்கும் வரக் கூடாது – இயக்குனரால் நடுத்தெருவுக்கு வந்த பாலாஜி முருகதாஸ்