விடாமுயற்சி படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்டை கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கொடுத்திருப்பது அதிர்ச்சியான ஒரு அப்டேட் என மூத்த பத்திரிகையாளரான அந்தணன் தனது புதிய வீடியோவில் பேசியுள்ளார்.
நடிகர் அஜித்குமாரை கலாய்க்கும் விதமாக கார் அருகே நின்றபடி அந்த வீடியோவில் அந்தணன் பேசியிருக்கிறார். சினிமாவில் அந்த காலம் தொடங்கி இந்தக் காலம் வரை ஸ்டன்ட் காட்சிகளில் பல நடிகர்களும் உயிரை பணயம் வைத்து நடிக்கின்றனர். டாம் குரூஸ் பல அடி உயர மலையிலிருந்து பைக்கில் கீழே விழும் காட்சிகளை எல்லாம் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: எனக்கு சம்பளமே வேணாம்.. ஆனால் அந்த படத்துல நான் நடிக்கனும்! தங்கவேலு கெஞ்சி கேட்ட அந்த திரைப்படம்
ஆனாலும், ரசிகர்களை கஷ்டப்படுத்தும் அளவுக்கு எந்த ஒரு வீடியோவையும் வெளியிடுவது இல்லை. ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு தான் நடிகர்கள் மேக்கிங் வீடியோவை வெளியிடுவார்கள். அதற்கு மாறாக நடிகர் அஜித் தொடர்ந்து பைக்கிலிருந்து விழுந்து விபத்துக்குள்ளாவது, தற்போது கார் கவிழ்ந்து பத்தடிக்கு கீழ் விழுந்து விபத்துக்குள்ளான வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை பதற வைத்துள்ளார் அஜித் குமார் என அந்தணன் விளாசித் தள்ளியுள்ளார்.
நடிகை சமந்தா மயோசைட்டிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அதை வைத்து புரோமோஷன் செய்ய தயாரிப்பாளர்கள் தன்னை வற்புறுத்தியதாக சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். மேலும், தன்னை சிம்பதி குயின் என கலாய்ப்பதாகவும் பேசினார். நடிகர் அஜித் குமாரும் அப்போதிலிருந்து இப்போது வரை அதே வேலையைத்தான் பார்த்து வருகிறார் என அந்தணன் பேச்சுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் அடித்து கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நாங்களும் இந்தியாவுலதான் இருக்கோம்!.. மார்லன் பிராண்டோவையே மடக்கிய நடிகர் திலகம்!…
டூப் போடாமல் நடிகர் அஜித் கார் கிராஷ் ஸ்டன்ட் செய்திருக்கிறார் என அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்களுக்காக ஒரு நல்ல அப்டேட்டை அஜித்துக்கு விடத் தெரியாதா என்றும் எப்போது பார்த்தாலும் பிரியாணி கிண்டுவது அல்லது கீழே விழுந்து சில்லறை வாருவது போன்ற வீடியோக்களை ஏன் வெளியிட்டு வருகிறார் என அந்தணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அஜித் சிம்பதி தேடிய வலிமை திரைப்படம் ஓடாமல் போனது. அதே நிலைமைதான் விடாமுயற்சி படத்துக்கும் ஆகும் என விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…