தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் அஜித்குமார் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.
அஜித் நடிக்கும் அடுத்த விடாமுயற்சி படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் துவங்க உள்ளது.
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகர் அஜித் குமார் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒரு கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த அஜித்குமாரின் அடுத்த கட்ட பைக் சுற்றுப்பயணம் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.
அதில், “லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது விடாமுயற்சி படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது.” என சுரேஷ் சந்திரா ட்வீட் செய்திருந்தார்.
தற்போது அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அஜித்குமார் தனிப்பட்ட முறையில் வெளியிடும் அறிவிப்பு.
அஜித்குமார் தனிப்பட்ட முறையில் வெளியிடும் அறிவிப்பு. இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன்:
‘வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்’. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride)” என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன். என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும்.
பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்து, உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு வழங்கும். தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள்.
வாழு வாழ விடு. அஜித்குமார்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் அஜித், இந்த திட்டத்தை 2013 ஆம் ஆண்டே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அந்த 2013 ஆம் ஆண்டு பேட்டியில், “பல ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் சாலைப் பயணங்களின் வீடியோக்களுடன் புதுப்பிக்கப்பட்ட ஒரு இணையதளத்தை பைக் பயணம் செய்யும் ரைடர்களுக்காக தொடங்க திட்டமிட்டுள்ளேன்” என அஜித் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…