நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமனம் செய்து கொண்டார். இவர்களின் திருமனம் 2000ம் ஆண்டு நடைபெற்றது. முதலில் இவர்களுக்கு ஒரு மகள் பிறந்தார். அனோஷ்கா குமார் என பெயர் வைத்தனர். சில வருடங்களுக்கு முன்பு ஒரு மகனும் பிறந்தார். அவருக்கு ஆத்விக் என பெயர் வைத்தனர். இவர்களின் புகைப்படங்கள் அரிதாகத்தான் சமூக வலைத்தளங்களில் வெளியாகும்.

அதாவது, ஷாலினி ஏதேனும் ஒரு விழாவில் கலந்து கொள்ள வரும் போது மகன், மகளை அழைத்து வந்தால் மட்டுமே அவர்களின் புகைப்படங்கள் வெளியாகும். இதில், ஆத்விக்கின் புகைப்படங்கள் அவ்வபோது வெளியாகி வந்தது. ஆனால், சில வருடங்களாக அஜித் மகள் அனோஷ்காவின் புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை. சமீபத்தில் அனோஷ்காவின் ஒரு புகைப்படம் வெளியானது.

இந்நிலையில், ஷாலினி தனது மகள் அனோஷ்கா மற்றும் சகோதரி ஷாமிலி ஆகியோருடன் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், அனோஷ்கா மிகவும் பெரிய பெண்ணாக இருக்கிறார்.
இதையும் படிங்க: இப்படி வளைச்சு நெழிச்சு காட்டுனா ஒரு மாதிரி ஆகுதுல..! ஜீ.வி பட நாயகி செய்யும் அட்டூழியம்..

அஜித்துக்கும், ஷாலினிக்கும் திருமணமாகி 22 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், அனோஷ்கா 17 வயதை தாண்டியிருப்பார் என கணிக்கப்படுகிறது.

