அஜித் மகனும் ரேஸர் ஆகிட்டாரே!.. குடும்பத்துடன் குட் பேட் அக்லி ஹீரோ!.. கார் சும்மா பறக்குதே!..

#image_title
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தின் டிக்கெட் புக்கிங்கும் நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் தனது குடும்பத்துடன் கோ கார்ட் ரேஸில் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

சிறுவயதில் இருந்தே அஜித்துக்கு கார் மற்றும் பைக் பந்தயங்களின் மீது அதீத ஆர்வம் இருந்து வந்தது. சினிமாவிலும் அவர் நடிக்கும் படங்களில் கார் மற்றும் பைக்குகளை ஓட்டும் காட்சிகளை அதிக அளவில் வைத்துள்ளார். வலிமை படம் எல்லாம் பைக் ஓட்டுவதற்காக மட்டுமே எடுக்கப்பட்டது என கலாய்க்கப்பட்டது. விடாமுயற்சி திரைப்படம் காரில் லாங் டிரைவ் செல்வதற்காகவே உருவாக்கப்பட்டது என்றும் கிண்டல் செய்தனர்.

சினிமாவைத் தாண்டி சமைப்பது, புகைப்படங்களை எடுப்பது, ட்ரோன் உள்ளிட்ட பறக்கும் விமானங்கள் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித்குமார். உலகம் முழுவதும் பைக் மூலமாக சுற்றி வருவதை இலக்காக வைத்துக் கொண்டு பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறார்.
மேலும், ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்து கொண்ட அஜித்குமாரின் அணி மூன்றாம் இடத்தை பிடித்தது. தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் சென்று கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், தனது மனைவி மற்றும் மகன் ஆத்விக் உடன் இணைந்து MIKA Go Kartல் கார் ஓட்டிய காட்சிகளை தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் வெளியிட்டு குட் பேட் அக்லி டிரைலருக்காக காத்து ஏமாந்திருக்கும் ரசிகர்களுக்கு சற்றே ஆறுதல் கொடுத்துள்ளார். நாளைக்காவது குட் பேட் அக்லி டிரைலர் வருமா அல்லது ஏப்ரல் 10ம் தேதி ஒரேயடியாக படமே வெளியாகி விடுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.