இவ்ளோ விஷயங்களில் ஆர்வம் கொண்டவரா அஜித்?!.. யாருக்கும் தெரியாத தகவல்!..

by சிவா |   ( Updated:2025-04-28 07:11:21  )
ajith
X

ajith

பொதுவாக நடிகர்களுக்கு வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த நேரமே இருக்காது. ஒரு படம் முடித்தவுடன் அடுத்த படத்தில் நடிக்க போய்விடுவார்கள். ஷூட்டிங் இல்லை என்றால் இயக்குனர்களிடம் கதை கேட்பது, புதிய படங்களை பார்ப்பது, குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது என்று மட்டுமே இருப்பார்கள்.

ஆனால், நடிகர் அஜித்குமார் இதற்கு விதிவிலக்கானவர். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அவருக்கு பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் இருந்தது. எப்போதும் தனது வீட்டின் இருக்கே ஒரு பைக் பட்டறையில்தான் அவர் அதிக நேரம் இருப்பாராம். இன்னும் சொல்லப்போனால் அமராவதி படத்தில் நடிக்க அப்பட இயக்குனர் அஜித்தை போய் பார்த்தது கூட அந்த பட்டறையில்தான் என்கிறார்கள்.

கதையை கேட்டு அஜித் கேட்ட சம்பளம் 40 ஆயிரம். அது கூட ஒரு புது பைக் வாங்கத்தான். இப்படி சினிமா ஒருபக்கம், பைக் ஒரு பக்கம் என ஆர்வம் கொண்டிருந்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பைக் ரேஸிலும் கலந்துகொண்டார். அதனால் பல விபத்துகளிலும் சிக்கி அவரின் உடலில் பல அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது.

பைக்கை போலவே கார் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர் அஜித். சில கார் ரேஸ்களிலும் கலந்துகொண்டார். ஷூட்டிங் இல்லையெனில் பைக்கிலேயே பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்வது அஜித்துக்கு மிகவும் பிடித்த ஒன்று. விடாமுயற்சி ஷூட்டிங் துவங்குவதற்கு முன் பைக்கில் உலகத்தில் பல நாடுகளிலும் சுற்றினார். அதோடு, விமானம் ஓட்டும் லைசென்ஸ் வைத்திருக்கும் ஒரே நடிகர் அஜித் மட்டுமே.

அதேபோல், ரிமோட் ஹெலிகாப்டர் இயக்குவது, துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துகொள்வது போன்றவர்களிலும் அஜித்துக்கு ஆர்வம் உண்டு. சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ரிமோட் மூலம் ட்ரோன் மற்றும் சிறிய ஹெலிகாப்டர் ஆகிவற்றை இயக்குவது பற்றி பாடமும் எடுத்திருக்கிறார். இது எல்லாவற்றையும் தாண்டி அஜித்துக்கு வேறு சில விஷயங்களிலும் ஆர்வம் இருக்கிறது.

அஜித் ஒரு புகைப்பட கலைஞர் என்பது பலருக்கும் தெரியாது. அதேபோல், அஜித்துக்கு கலைப்பொருட்கள் மீது அதிக ஆர்வம் உண்டு. இவரை நிறைய மியூசியங்களில் பார்க்க முடியும். பல நாடுகளின் நாணயங்கள், அதிநவீன கேமரா, மினியேச்சர் ஹெல்மெட்டுகள், தபால் தலைகள், விதவிதமான கைக்கடிகாரங்கள் அவரது சேமிப்பில் இருக்கின்றன. மேலும், விதவிதமான பைக்குகளை சேகரிப்பதும் அஜித்துக்கு பிடித்த ஒன்று. பி.எம்.டபிள்யூ வகை பைக்குகள் அவரிடம் நிறைய இருக்கிறது.

ஒருபக்கம் துபாய் கார் ரேஸில் 3வது பரிசை வாங்கிய அஜித்தின் டீம் அடுத்த போட்டியில் 2வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. வருகிற அக்டோபர் மாதம் வரை அஜித் கார் ரேஸ்களில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

Next Story