இப்ப பேசுங்கடா!..உடல் எடையை குறித்து ஸ்லிம் ஆன அஜித்...தாறுமாறா வைரலாகும் புகைப்படம்....
உடல் எடை பற்றி கிண்டலடிப்பதை அடிக்கடி சந்தித்தவர் நடிகர் அஜித். குண்டாக இருக்கிறார், தொப்பை வைத்திருக்கிறார், ஒரு நடிகராக உடல் எடையை அவர் பராமரிப்பதில்லை என அவர் மீது எப்போதும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பவர். வலிமை படத்தில் கூட அவர் பஜன்லால் சேட் போல இருப்பதாக புளூசட்ட மாறன் கிண்டலடித்தார்.
இது அஜித்தை அதிகம் பாதித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்து வினோத் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு உடல் எடையை குறைக்க முடிவு எடுத்தார்.
அதற்கான தீவிர உடற் பயிற்சியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே 10 கிலோ உடல் எடையை அவர் குறைத்த நிலையில்,மேலும், 15 கிலோ எடையை குறைக்க அவர் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், ரசிகர் ஒருவர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தில் அஜித் மிகவும் ஸ்லிம்மாக மாறி ஆச்சர்யம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.