ரெட்ரோ சூர்யாவுக்கு வேட்டு வைக்க ரெடியான அஜித் குமார்!.. மே 1ம் தேதி இன்னொரு ஓஜி சம்பவம் இருக்கா?..

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இன்று வெளியான குட் பேட் அக்லி படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடிவரும் நிலையில் மே 1ம் தேதி அவரது 54வது பிறந்தநாளை முன்னிட்டு 2000ம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை ரீ ரிலிஸ் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2000ம் ஆண்டில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், தபு, அஜித், அப்பாஸ், மணிவண்ணன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மே 1ம் தேதி சூர்யாவின் ரெட்ரோ மற்றும் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி என இரண்டு படங்கள் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது அஜித்தின் பிறந்த நாள் என்பதால் அவர் நடித்திருந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படமும் ரீ ரிலிஸாக உள்ளது.
நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் படு மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்த நிலையில் அவருக்கு ரெட்ரோ படமாவது கைக்கொடுக்கும் என ரசிகர்கள் எதிப்பார்த்துக்கொண்டிருக்கும் சமயத்தில் நடிகர் அஜித்தின் படம் ரீ ரிலிஸாவது மோதலை ஏற்படுத்தும் என சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர்.

மேலும், மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் மற்றும் நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளன்று வெளியாக உள்ள ரெட்ரோ, டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய முன்று படங்களின் நடுவே நிகழவிற்கும் போட்டியில் வெற்றி பெறுவது யார் என்பதை கார்த்திருந்து பார்க்கலாம்.