Connect with us

அந்த படம் நடித்திருந்தால் அஜித் வேற லெவல்… பாவம் அந்த இயக்குனர் இறந்து போய்விட்டார்…

Cinema News

அந்த படம் நடித்திருந்தால் அஜித் வேற லெவல்… பாவம் அந்த இயக்குனர் இறந்து போய்விட்டார்…

மலையாளத்தில் வெளியாகி மலையாள சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் பார்க்க வைத்த திரைப்படம் என்றால் “ஐயப்பனும் கோஷியும்” என்று கூறலாம். இந்த படத்தை இயக்குனர் சச்சி என்பவர் இயக்கி இருந்தார். படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் அந்த அளவிற்கு அருமையாக இருந்திருக்கும்.

இந்த  படத்தை இயக்கியதற்காக இயக்குனர் சச்சிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சச்சி, தற்போது இந்த உலகத்தில் இல்லை. ஆம்,  உடல் நலக்குறைவால் கடந்த ஜூன் மாதம் காலமானார். இந்நிலையில் ஐயப்பனும் கோஷியும் வெளியான பிறகு படத்தை பார்த்து விட்டு பலர் இயக்குனர் சச்சிக்கு கால் செய்து பாராட்டினார்கள்.

இதையும் படியுங்களேன்- எம்.ஜி.ஆராக மாற நினைக்கும் சிம்பு.?! என்ன செய்துள்ளார் பாருங்க..

அந்த வகையில், நடிகர் அஜித் ஐயப்பனும் கோஷியும்  படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சர்ச்சியை  பாராட்டியதாகவும், தனக்கும் அதே போல ஒரு கதையை தயார் செய்ய சொன்னதாகவும் கூறப்படுகிறது. அஜித் சொன்னதால், இயக்குனர் சச்சியும் ஒரு கதையை தயார் செய்தாராம்.

ஆனால், தற்போது சச்சி உயிரோடு இல்லாததால், அந்த படத்தை எடுக்கமுடியவில்லை. ஒரு வேலை சச்சி உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக அவர் அஜித்தை வைத்து ஒரு தரமான படத்தை இயக்கியிருப்பார். படமுமும் வேற லெவலில் இருந்திருக்கும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top