அட ஸ்லிம்மா செம ஸ்டைலா இருக்காரே அஜித்!. வைரலாகும் விடாமுயற்சி கெட்டப் போட்டோ!...
Ajith kumar: நடிகர் அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. துணிவு படத்திற்கு பின் அஜித் நடிக்கும் படம் இது. துணிவு படம் கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியானது. ஆனால், ஒரு வருடம் ஆகியும் அஜித்தின் அடுத்த படம் வெளியாகவில்லை.
துணிவு படம் வெளியாகி 10 மாதங்கள் கழித்துதான் விடாமுயற்சி பட வேலைகள் துவங்கியது. இடையில் விக்னேஷ் இயக்குனராக நியமிக்கப்பட்டு பின்னர் அவர் தூக்கப்பட்டு மகிழ் திருமேனி உள்ளே வந்தார். சொந்த கதை, ஹாலிவுட் கதைகள் என பல கதைகள் விவாதிக்கப்பட்டு கடைசியில் ஒரு கதை உறுதி செய்யப்பட்டு படப்பிடிப்பு துவங்கியது.
இதையும் படிங்க: அந்த ஹீரோவால் மார்க்கெட்டை இழந்த நடிகை ஹீரா!.. இவ்வளவு விஷயம் நடந்திருக்கா?
இப்படத்தின் படப்பிடிப்பு 2 மாதங்களுக்கு முன்பு அசர்பைசான் நாட்டில் துவங்கியது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க முக்கிய வில்லனாக அர்ஜூன் நடித்து வருகிறார். இப்படத்திற்காக அர்ஜுன் ஸ்டைலாக இருக்கிறார். அவரை அஜித் எடுத்த புகைப்படமும் இணையத்தில் வைரலானது.
விடாமுயற்சி படத்தின் 50 சதவீத படப்ப்பிடிப்பு முடிந்துவிட்டது. பொதுவாக அஜித் அவர் நடிக்கும் படங்கள் தொடர்பான புரமோஷன் மட்டுமல்ல, எந்த சினிமா விழாவிலும் கலந்துகொள்ளமாட்டார். பல வருடங்களாகவே இதை அவர் கடைபிடித்து வருகிறார். ஒருகட்டத்தில் இதுவே அவருக்கும் பழகிவிட்டது. ரசிகர்களுக்கும் பழகிவிட்டது.
இதையும் படிங்க: நான் லேடி சூப்பர்ஸ்டாரெல்லாம் இல்ல!… அப்போ புரியல.. அம்மணி சொன்னதுக்கு இப்போ புரியுது…
ஆனாலும், அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் மட்டும் வெளியாகும். பெரும்பாலும் விமான நிலையத்தில் அவர் இருக்கும் புகைப்படங்கள் அல்லது ரசிகர்களுடன் அவர் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி அவரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். விடாமுயற்சி படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறியிருக்கிறார் அஜித்.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படம் தற்போது வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை நிற டீசர்ட், கூலிங்கிளாஸ் அணிந்து செம ஸ்டைலாக இருக்கிறார் அஜித்.