விஜய் வீடியோ வந்தா நான் போட்டோ போடுவேன்!.. வெளியானது புது வீடியோ...
அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அசர் பைசானில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். துணிவு படம் வெளியாகி 10 மாதம் ஆன நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் நவம்பர் மாதம் துவங்கியது.
இந்த படத்தில் திரிஷா, அர்ஜூன் என பலரும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை லைக்கா நிறுவனம் செய்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைசானில் துவங்கியது. ஆனால், அங்கு பனிப்பொழிவு, மணல் புயல் ஆகியவற்றின் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டுக்கொண்டே வந்தது.
எனவே, தற்போது படப்பிடிப்பை மாற்றிவிட்டார்கள். இன்னும் சில நாட்களில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் உள்ள திபில்சி எனும் ஊரில் நடக்கவுள்ளது. இந்த படம் ஆங்கில பட பாணியில் மிகவும் சிறப்பான ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.
ஆனால், படத்தை பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரம், அசர்பைசான் நாட்டில் அஜித் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. ஒரு வாரத்தில் 5க்கும் மேற்பட்ட அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியது.
இந்நிலையில், அஜித் மற்றும் திரிஷா இணைந்து ஒருவருடன் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விடாமுயற்சி அப்டேட் எதுவும் இல்லாமல் தவிக்கும் அஜித் ரசிகர்களுக்கு இந்த புகைப்படம் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
விஜய் ஒரு பக்கம் படப்பிடிப்பு தளங்களில் செல்பி வீடியோக்களை எடுத்து வந்தால் அஜித்தின் புகைப்படங்களும் தொடர்ந்து வெளியாகி வருகிறது. விஜய் தொடர்பான வீடியோ வெளியானாலே உடனே அஜித்தின் புகைப்படங்கள் வெளியாவது வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.